***தாசிமகன்***கவிதை காமநேசன்

வருவாய் நீயென நானும் விழி வெட்டாது
-வண்ணப் பூங்காவில் காத்திருந்தேன்.
தருவாய் உன் அன்பைப்பொழிந்து, நம்
-திருமண உறுதிமொழியோடு எனவே,
கருவாய் உன் உயிரைத்-தந்துமே நீயும்
-காணாமல் போனது நியாயமோ சொல்?
வாருவாய் இல்லாத வாழ்க்கை வாழும்
-வறிய குடும்பப்பெண்தானே என்பதாலோ
தெருவாய் வீதியாய் திரிகிறேன் நான்
-தென்படும் உன்திருமுகம் ஒருமுறையென
உருவாய் வந்தது உன்மகவு என்வயிற்றில்,
உடையவன்யாரென்று ஊருக்குத்தெரியாமலே
தெருவாயை மூட முடியாது நானும் இங்கு
-தினமும் திண்டாடுகிறேன் தெரியுமா ராசா.
திருவாய் திறந்து நீயும் தெரிவித்தாலன்றி திடமாய்ச்சொல்கிறேன்உன்மகன் தாசிமகனே
காமநேசன்