திருமதி.நகுலா சிவநாதன் அவர்களுடைய „நதிக்கரை நினைவுகள் “ நூல் அறிமுக விழா 16.12.2018 சிறப்பாக அமையப்பெற்றது

 

16.12.2018 ( ஞாயிற்றுக்கிழமை) முன்னைநாள் யாழ் பல்கலைக்கழக கலைப்பட்டதாரி திருமதி.நகுலா சிவநாதன் அவர்களுடைய „நதிக்கரை நினைவுகள் “ நூல் அறிமுக விழா மிகவும் சிறப்பாக குளிர்படந்த மாலைப்பொழுதிலும் மண்டபம் நிறைத்த பெருந்திரளான மக்களுடன் மிகவும் சிறப்பாக அமையப்பெற்றது. பி.ப 3.30 மணியளவில் மங்கள விளக்கேற்றல், அகவணக்கம், வரவேற்புரை, வரவேற்புநடனத்தை தொடர்ந்து நூல் அறிமுகவிழா தலைமையினை மண் சஞ்சிகை ஆசிரியர் திரு.வ.சிவராஜா அவர்களின் தலைமையுரையுடன் நூலின் ஆசிரியர் பார்வை உரையிரையினை ஆசிரியர் திரு.வ.மனோகரன் நிகழ்த்த, நூலின் மதிப்பீட்டுரையினை „கவிமாமணி “ கி.த.குகதாஸ் அவர்கள் அட்டைப்படம் தொடக்கம் அணிந்துரையூடாக சென்று காதல் கவிதைகளில் மிகவும் துல்லியமாக விளக்கி சபையோரை சிரிப்பொழியுடன் மகிழச்செய்தார்.
தொடர்ந்து யேர்மனிய பல்கலைக்கழக மாணவன் செல்வன்.உதயகுமார் அனுசன் அவர்கள் நூலில் இருந்து ஒரு கவிதையினை மிகவும் நயம்பட கவிபாட தொடர்ந்து சிறப்புவிருந்தினராக வருகை தந்த Dr. திருமதி.த.வாசுகி அம்மையாரின் வாழ்த்துரைகளோடு. „நதிக்கரை நினைவுகள் “ நூல் பெரியளவில் உருவமைத்து நூல் ஆசிரியர் மற்றும் அவர்தம் குடும்ப சகிதம் இருமருங்கும் மங்கள விளக்குடன் சிறுமிகள் அணிவகுக்க சபையோர் எழுந்து மகிழ்வுடன் கைதட்ட மேடையை நூல் வந்தடைந்தது. சிறப்பு விருந்தினராக வருகை தந்த Dr.திருமதி.த.வாசுகி தம்பதிகள் நூலினை வெளியீட்டு வைக்க முதற்பிரதியை நூலாசிரியரிடம் இருந்து திரு.பாலகிருஸ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.தொடர்ந்து வாழ்த்துரைகளை கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆலயநிர்வாகத்தினர், பாடசாலை நிர்வாகத்தினர் என வாழ்த்தி உரை நிறைவுபெற தொடர்ந்து கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் கௌரவிப்பை தொடர்ந்து நூலாசிரியரின் ஏற்ப்புரை நன்றியுரையுடன் விழாஇனிதே நிறைவு காண. நிகழ்வுகளை மிகவும் தூய தமிழில் யேர்மனிய பல்கலைக்கழக மாணவி செல்வி.சரிக்கா சிவநாதன், மற்றும் அறிவிப்பாளர் திரு.ரமேஸ்வரன் அவர்களும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.