தை …(கவிஞர் வே.புவிராஜ்)

வளமைக்கு மாறாய்
வர என்ன போகுது. இருப்பதை காப்பதே பெரும்பாடாய் ஆனது. பொங்கினோம் புசித்தோம் அன்றொருகாலம் . இயற்க்கை பொங்காமல் இருக்கவே இறைவனை மன்றாடி வேணடுறோம் .

புதிர் எடுத்து பொங்கவைக்க
இடி மழை விடவில்லை . களை எடுத்து வரப்புயர்த்த
துளி மழை வரவில்லை .
கை இருப்பிருந்த
நெல் விதைத்தோம் வயிறு காயுது . கொட்டித்தீர்த்த மழையினால்
வசதி போனது .
நேர் எதிராய் நிற்குது இயற்கை தரும்
சீற்றம். எதற்க்காக பொங்கவேண்டும் இயற்க்கைக்கு
நன்றி சொல்லி .

பெரும் சித்தர்
போகர் வழி
சீடர் எல்லாம்
வாய்க்கு வாய் சொல்வதெல்லாம் உண்மைதானோ .
சிவபூமி ஆழியிலே மூழ்குமாம்
குமரியிலே மிஞ்சியது அத்தனையும் அழியுமாம் பாவவினை சூழ்ந்து நின்று மண்
உலகை ஆளுமாம்
அந்த பருமனையும் சனிபிடித்து ஆட்டுமாம்.

பௌத்தறிவு வந்தபின்னும் பக்த்தியிலே பற்றுதல் . இயற்க்கை தன்னை சீரழித்தே வளத்தை எல்லாம் நாம் கெடுத்தோம் .
பய பக்தி இருந்தபோது பாவம் என்று தோன்றியது .
பகுத்தறிவு
வந்தபின்னர் பாவம் செய்ய தூண்டியது .

நுன்னறிவு நூதனத்தால் மண் உலகு வாழுது
மலடு என்ற சூனியத்தில் இயற்க்கை எல்லாம் அழியுது.
விதைக்குள்ளே
விந்து இல்லை
காய்ப்பது கனிந்தாலும் கனிக்குள்ளே
விதை இல்லை ஞானப்பழமாக்கி வியாபாரம் செய்கிறார் கருப்பொருளாச்சு
கரு கூட பணம் ஆச்சு .

நினைவுச்சடங்காக எதிர்காலம் இருக்குமோ நிகழும் காலங்கள் நிம்மதியாய் களிக்க இயற்கையை வணங்கி இயலாமையை போக்குவோம் ….

வே.புவிராஜ்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert