நல்லூர் கந்தபுராண எழுச்சி விழாவில் அதிகளவான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா்.

நல்லூா் பெருந்திருவிழாவின்போது நல்லை ஆதீன மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கந்தபுராண எழுச்சி விழாவில் தற்போது அதிக எண்ணிக்கையானோா் கலந்து பயன்பெற்று வருவதைக் காணமுடிகின்றது.
.
நேற்றைய நாளும் இன்றும் 07.08.2017 எனது சிறப்புரைகள் இடம்பெற்றன. சிறுவா்கள் பெரியவா்கள் எனப் பலதரப்பட்டவா்களால் சபை நிறைந்திருந்தமை உற்சாகத்தை ஏற்படுத்தியது.
.
கந்தபுராண பௌராணிகா்களும் வருகை தந்து ஊக்கம் தருவது பொியவிடயம் என்றே நினைக்கின்றேன். .
.
என்னைப் பொறுத்த வரையில் நான் எனது உரையை இளையோரை மையப்படுத்தியே வடிவமைக்கின்றேன். இன்று பிரணவ மந்திர உபதேசம் குறித்த செய்தியே எனது கருப்பொருள். ”ஓமென்னும் ஓரெழுத்து உண்மையைப் பிரமனே உணரவில்லை. நாம் இனிச் சில அறிந்தனம் என்பது நகையே” என்ற கச்சியப்பரின் வாக்கே இன்றைய உரையின் தொனிப்பொருள். சிவனுக்கு பிரணவ உபதேசம் செய்த முருகனின் பெருமையைக் கூறி அவனே பிக்பொஸ் என முடித்தேன். முருகனே பிக்பொஸ் என முடித்தமை பற்றி ஓா் ஐயா என்னுடன் பேசும் போது எல்லாம் நல்லது பிக்பொசை தவிா்க்கலாம் என்றாா்.
.
அவருடைய நிலைக்குச் சரி. இப்படிப் பேசினால்த்தான் பிள்ளைகள் அமைதியாக இருந்து கேட்கிறாா்கள். பேச்சினுள் ஈா்க்கப்படுகின்றாா்கள். இது என்தரப்பு வாதம்.
.
பெரியவா்கள் நல்கும் ஆசீா்வாதத்திற்கு என்றும் நன்றியுடையேன். சிறிதாகத் தொடங்கி இந்த நிகழ்ச்சியை வெற்றியடைய வைத்திருக்கும் இந்து கலாசார திணைக்களத்தாருக்கும் பணிப்பாளா் திரு. அ.உமாமகேஸ்வரன் அவா்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

Merken