நிறைவான நெடு விழா…


சென்னை
தி நகரில்
பெரு விழா..

என்னை
ஈர்த்த
தமிழ் விழா…

உலகப்
பரப்பெங்கனும்
பரந்து வாழும்
சாதனை தமிழ்
பெண்களுக்கு விருது…

இனிய
நந்தவனத்தில்
திரு சந்திரசேகரனின்
பெரு முயற்சியது…

பல முகங்கள்
பற்பல சாதனை
முகங்கள்..
கனடா லண்டன் துபாய்
யேர்மனி
இந்தியா இலங்கை…

இவர்களை
வாழ்த்த வந்திருந்த
அறிஞர்கள்
முனைவர்கள்
திரைப்பட இயக்குனர்கள்..
மண்டபம் அழகாய்
பொலிவாய் நிறைவாய்….

எந்தனுக்கும்
சிறு வாய்ப்பு
தாய் மண் அவலம்
வடிக்க கிடைத்த தளம்..

காணாமல்
போனோர் கதை கூறி
கண்ணீருடன்
தேடும் உறவுகளின்
நிலை கூறிட
கிடைத்த கணம்
மனம் திறக்க வைத்தது..

தேன் தமிழில்
தொகுப்பாளினிகள்.
சாதனையாளர்களின்
தெளிவான உரை வீச்சுடன்
விருது வழங்கல்
நிறைவுற்றது…
ஏற்பாட்டாளர்களுக்கும்
சாதனையாளர்களுக்கும்
நிறைவான வாழ்த்துக்கள்..
08.03.2020.