பிரான்ஸ் 20 வது தமிழர் விளையாட்டு விழாவில் (02.07.2017) பாரிஸ் கலைஞர்களின் நாடகம்!!

பிரான்ஸில் நடைபெறும் (02.07.2017) T,R,O,வின் விளையாட்டு விழாவில் பாரிஸின் முன்னணிக்கலைஞர்களின் நாடகம் மேடையேறுகிறது.
அதற்கான கலந்துரையாடல் 31.05.2017 அன்று பிரான்ஸ் லா கூர்நொவ் சிறீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சிறீலா சிறீ மகேந்திர சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நாடகத்திற்கான கதையை மாலிக்கபூர் புகழ் M,P, நாதன் அவர்கள் எழுதுகிறார். உரையாடல் நாடகமெருகேற்றலை மூத்த நாடகவியலாளர் ஈழத்தமிழ் விழி, கு. பரா அவர்கள் கவனிக்கிறார். இயக்கி நடிக்கிறார் மேடை ,தொலைக்காட்சி, குறும்பட புகழ் நடிகை மரியநெற் அவர்கள்.

இதில் நடித்து அசத்தவிருப்பவர்கள் ஈழத்தமிழ் விழி மைலை இந்திரன், M.P, நாதன், புனிதமலர், கமலவேணி, மரியநெற், ரவி, சுரேஸ். கே.பி.லோகதாஸ், நாடக ஒருங்கிணைப்பாளர் T.R,O,வின் பிரான்ஸ் முக்கிய பிரதிநிதி திரு.அருள்மொழித்தேவன் அவர்கள்.