புரவிப் புயல்

புயல்
வேகத்தில்
புரட்டிப் போட்ட
புரவிப் புயல்
பரவிப் பாய்ந்து
கலைந்தது…
கண்ணீரின்
ஈரம்
காயாமலே
கலங்கிய
உறவுகளின்
வாழ்வு
தண்ணீரால்
குலைந்தது.
ஆதாரமான
சிறிய வருமானங்களையும்
சேதாரமாக்கி
வெள்ளத்தில்
மிதக்க வைத்து
வதம் செய்ததால்
வாழ்வு
சிதைந்தது..
மனமுள்ளோர்
கண் திறந்தால்
பாதிக்கப்பட்டோர்
வலிகளின் கனம்
கொஞ்சம்
குறைந்திடும்..
கண்டங்கள்
தாண்டி வாழும்
உறவுகள்
தொண்டர்களானால்
தின் பண்டங்களுக்கு
வழி ஏதும் கிடைக்கும்
சங்கடங்கள்
தணிந்திடும்…
தர்மம் ஒன்றே
காலப் பேருதவி.
பிறர் பிள்ளகளின்
தலை தடவினால்
நம் பிள்ளைகள்
தலை நிமிர்வார்கள்.

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி