புறப்படு புதுயுகமொன்று படைக்க!கவிதை ஜெசுதா யோ

 

பெண் என்றால்
போகப் பொருளென நினைத்தாயோ
அதனால்தான்
ஐந்து வயதிலும்
ஆடைகளைகிறாய்
ஐம்பது வயதிலும்
அதையே செய்கிறாய்…!

பாரதி சொன்ன
பெண் எங்கே
பகலிலும் இரவிலும்
பாதுகாப்பு இன்றி
அலறும் பெண்ணினமே…!

அடுக்களையில் இருந்து
சட்டசபையும் ஏறியாச்சு
ஆனாலும்
பெண்ணிற்கு
பாதுகாப்பு மட்டும்
மட்டமாய் இருக்கிறது …!

எந்த இடத்தில்
இருந்தாலும்
பெண்னென்றால்
எட்டி உதைக்கும்
சமூதாயம்
தட்டிக்கேட்க நினைப்பதில்லை…!

அடிக்கடி ஆடைகள்
மாற்றுவது போல
மனம் மாறும்
ஆடவர்களுக்கு…!

உன் அன்னையும்
பெண்தானே
உன் தங்கையும்
பெண்தானே…!

உன் மனதில்
மட்டும் ஏன்
இதைமறந்து
இழிவுசெய்தாய்…!

புறப்பட்டு விடு
புதிய பாதைசமைத்து
பெண்களை கண்ணீரில்
நனைக்கும் இந்த
உலகத்திற்கு பாடம்
ஒன்று புகட்டிட….!!

ஆக்கம் ஜெசுதா யோ