பூவொன்று..

பெற்றவளை
உற்றவளை
உடன் பிறந்தவளை
உள்ளத்திலிருத்தி
உண்மையாய்
வாழக்கற்றவர்கள்
காவலரண்களாவர்..
மதிக்கத்
தெரிந்தால்
மகமாயி..
மிதிக்க
முனைந்தால்
பத்திரகாளி.
இழப்பதற்கு
ஏதுமில்லாவர்கள்
சாவுக்கு
அஞ்சுவதில்லை.
சூரையாட வருவோரை
சங்காரம்
செய்வார்கள்..
பெண்ணிண்
வலிகளையும்
வலிமைகளையும்
அறியாத மானிடர்
பூக்களை
புயலாக்கிடுவர்..
பூக்கள்
புயலானால்
பூமியும் தாங்காது.
சாது மிரண்ணடால்
காடு தாங்காதென்பர்
பாதகர்களை
பந்தாடும் மாதரை
வணங்கிடுவீர்..
ஆக்கம் கவிஞர் தயாரிதி