பெண்உரிமை முழங்கட்டும்

பெண்கள் தினத்தில் பெண்உரிமை முழங்கட்டும்
அடிமைப்படும் பெண்களின் மடமை மறையட்டும்
உரிமை இளந்த பெண்களின் விடியல் உயரட்டும்
மனிதம்மனித உணர்வுகொண்டு தலைநிமிரட்டும்

உரிமையோடு எழுந்து வந்துஎங்கும் வெல்லட்டும்
தாய்மண்ணை மனையை மீட்க்க ஒன்றுகூடட்டும்
மறைக்கபட்ட எம்மக்களுக்காக நீதி கேட்கட்டும்
உணர்வோடு உலகறிய உரிமை முழக்கமிடட்டும்

தாய்மொழி காத்திட அமைதியான போராட்டமே
எழுர்சியில் வரும் எம்புரட்ச்சி தரும்போராட்டமே
வெற்றிப்பாதை காணும் அமைதி போராட்டமாக
ரத்தமின்றி யுத்தமின்றி உரிமையான போராட்டம்

பாவலன் பாடிய புதுமை பெண்களாக வலம்வருக
தமிழும் மலரும் எங்கும் நல்விடியல் உதயமாகும்
தாயாக தாரமாக உறவாக உரிமையாக மகளாக
மகளிர்இனத்துக்கு புதியஎழுர்சியோடு வாமகளே

கவியாக்கம் கவிஞர் அரங்கமும் அதிர்வும் கணேஸ்