மது சுதா எம் விமர்சனம்மேதகு மற்றும் பொய்யா எம்மை முன்னிலைப்படுத்திய திரைப்படைப்புக்கள்

எம் விமர்சன அணுகுமுறையும் மேதகு மற்றும் பொய்யா விளக்கு திரைப்படங்களும்.அண்மைய நாட்கள் எம்மை முன்னிலைப்படுத்திய திரைப்படைப்புக்களும் அவை மேலான எதிர்ப்புக்களுமே என்னைச் சூழ இருந்தது. அதில் இருந்த எதிர்ப்பு ஆதரவு மனநிலை இருந்தாலும் ஆர்வக் கோளாரில் எதையும் உளறிவிடக் கூடாதென்பதில் உறுதியாக இருந்தேன்.Family man 2 வில் ஹிந்தியில் போன வசனங்களை நான் புரிவதற்காக அதன் வசனங்களை ஆங்கில வடிவில் படித்தேன் அதை இணையத்திலும் பகிர்ந்தேன். அடுத்த கணம் நானும் சில ஈழத் தமிழர்களால் துரோகியாக்கப்பட்டேன்

May be an image of 2 people and text that says 'உலகெங்கும் அதி விரைவில் தமிழீழ திரை க்களம் மேதகு கிட்டு ரியாஸ்- இளங்கோவன்- பிரவின் குமார் க.முஜிபூர் ரஹ்மான்'

🙂

ஏனென்றால் அதில் என்ன இருந்தது என்றெல்லாம் பார்ப்பதற்கு அந்த உணர்ச்சிப் பெருக்கு அவர்கள் கண்ணை மூடிவிட்டது.ஜகமே தந்திரம் பற்றிய clubhouse க்கு வாங்கோ என சகோதரர்களான Kiruthiehan MathirubanKishoker Stanislas கேட்டதால் ஒதுங்கியிருந்த நான் அங்கு போனேன் . அடுத்த நாளே நான் சொல்லாதவையெல்லாம் என் பெயரில் வெளியே உலாவியது. ( 150 பேர் இருந்த இடத்தில் 150 விதமாக எடுக்கப்பட்டிருக்கலாம் )எனக்கென்றால் நாம் ஒரு விடயத்தை சரியான முறையில் தான் அணுகுகின்றோமா அல்லது சரியான வகையில் தான் விமர்சனத்தை முன் வைக்கிறோமா என்ற கேள்வி உள்ளது.ஜகமே தந்திரத்தில் விமர்சனரீதியாக எதிர்க்க வேண்டிய இடங்களும் ஆதரிக்க வேண்டிய இடங்களும் தாராளமாக இருந்தது ஆனால் நம்மவர் அணுகிய சில உதாரணம் தருகின்றேன்.1) ராஜீவ் காந்தி கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை படத்தில் கடத்தல்காரனாக வைத்து விட்டார்கள். (சிவராசன் & சிவதாஸ் பெயரில் எம்மவருக்கே தெளிவில்லை)2) கார்த்திக் சுப்புராஜ் என்ற தெலுங்கனின் சூழ்ச்சி.இந்த உதாரணங்களையே எடுங்கள் உண்மையில் இது சரியான விமர்சனமா ? பாவம் கார்திக் சுப்புராஜ் தனது இறைவி அடிவாங்கும் போது கூட அதன் பின்னணியில் இருந்த மே17 பற்றி ஒரு இடத்திலும் வியாபாரம் செய்ததாக நான் அறியவில்லை.ஜகமே தந்திரத்தில் ஈழத்தவர் இருவர் Somee TharanPrasan JO முக்கிய சந்தர்ப்பம் கிடைத்து அடுத்த அடி எடுத்து வைத்திருந்தார்கள் அதுவும் எமக்கு பெரு வெற்றியல்லவா.நாம் விமர்சனப் போக்கை விடுத்து எதிர்ப்பு என்ற மனநிலைக்குள் இருக்கின்றோம். Family man 2 பிரபலமாக்கி ஓட வைத்ததில் இந்த எதிர்ப்பு மனநிலைக்கும் சம்பந்தமுண்டு. இன்று „மேதகு“ என்ற திரைப்படம் OTT க்கு வருகின்றது. உங்களைப் போலத் தான் நானும் காத்திருக்கின்றேன். ஆனால் இதுவரை காலமும் அணுகியது போல அணுகாமல் சரியான விமர்சனரீதியாக ஒரு படைப்பை அணுகலாம்.தனேஸ் கோபால் ( Thanesh Gopal ) இயக்கத்தில் பேரன்புக்குரிய வைத்தியர் வரதராஜன் ( Varatharajah Thurairajah ) அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய „பொய்யா விளக்கு“ திரைப்படமும் Amazon க்கு வெளியிட்டிருக்கின்றார்கள்.எல்லாம் எம் கதைகள் தான் முடிந்தால் பாருங்கள். „ஒருவனைப் பாராட்டும் போது முன் பின் ஆராய எல்லாம் தேவையில்லை எது பிடித்ததோ அதைப் பாராட்டலாம். ஆனால் ஒருவனில் குற்றம் சுமத்த முதல் கொஞ்சம் முன்னும் பின்னும் ஆராய்ந்து முன் வைப்பதே சிறப்பு“

120Kokulan Santhan, Vaiththilingam Rajanikanthan and 118 others20 Comments6 SharesLikeCommentShare