மிக விரைவில் வர இருக்கும் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி.கோணேஸ்அவர்களின் இசையில் 100 பாடல்கள்:

70களில் ஈழத்தில் முதல் முதலாக வெளிவந்த தமிழிசைத்தட்டு ஈழத்து

மெல்லிசை மன்னர்கள் பரமேஸ் கோணேஸ் மகேஸ்

அவர்களாலேயே என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இவர்கள் இதனைத் தொடர்ந்து பல தமிழ்–சிங்கள இசைத்தட்டுக்களை

வெளியிட்டுள்ளனர்.

கலையரசு சொர்ணலிங்கம் அவர்களால்

விருதுபெற்றவர்கள் பரமேஸ் கோணேஸ் மகேஸ் ஆகியோர் என்பதும்

யாவரும் அறிந்ததே.

70கள் முதல் இசையமைத்த வந்த M.P.கோணேஸ் தொடர்ந்தும்

1978க்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபானம் இசையமைப்பாளராக கடமை ஆற்றி

அங்கு 60 பாடல்களை இசையமைத்த ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.கோணேஸ்

அதன் பின் 1985ல் யேர்மனிலிலும் இவரின் பணி தொடந்தது

கவிஞர் முகில்வாணன் எழுதிய 75 பாடல்களை இசையமைத்துள்ளார்;

அதன் பின் இவர் கனடாவில் தன் கலைபணியைத்தொடர்ந்து பலபாடல்களை இசையத்து வெளியிட்டு இருக்கின்றார்.

இசைத்தாகம் தீராத திருமலை தந்த M.P.கோணேஸ் அவர்கள் புதிய முயற்சியாக தொடர்ந்தும் 100 புதிய பாடல்களை இசையமைக்க ஆரம்பித்திருக்கிறார்.

இதன் பாடல்களை பாடலாசிரியர்கள்

ஈழத்து மெல்லிசைமன்னர்

M.P.பரமேஸ்,கோவிலூர் செல்வராஜன்,உதயன் பத்திரிகை

ஆசிரியர் R.N . லோகேந்திரலிங்கம்,முகில்வாணன்

வை.ஐ.ச.ஜெயபாலன்,R .R பிரபா, திருமதி கோதை அமுதன்,

திருமதி. பத்மினி கோணேஸ், அமரர் ஈழத்து ரத்தினம் அவர்கள்,

திருமலை சந்திரன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

பாடியவர்கள்

பாடல்களை தென்னிந்திய பாடகர் T.Lதியாகராஜன் தீபிகா தியாகராஜன்

T.L மகாராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.

தொடர்ந்து எமது ஈழத்து கலைஞர்களின்,

30 பாடல்களை கனடாவில் இளம் சந்ததியினர் பாடி ஒலிப்பதிவு

நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தப்பாடலுக்கான ஒலிப்பதிவுகளிலும், தயாரிப்பிலும் கலைஞர் பாபு

ஜெயகாந்தன் உதவி வருகின்றார்,

இந்தப்பாடல்கள் வெகு விரைவில் வெளிவர இருக்கின்றன.

இவற்றின் விபரம்ங்களை MPKONEZSH. COM என்ற

பகுதியிலே ஆதாரப்படுத்தப்பட்டுள்ளன.

50 வருடங்களிற்குப் பின்பும் தமிழ் மக்கள் மனதில் இன்றும்

நிறைந்து நிற்கும். எம்.பி.கோணேஸ் அவர்களின் இசையமைப்பில்

உருவான் பாடல்கள் போன்று; இன்னும் 100 வருடங்களின்

பின்பும் அனைத்துப் பாடல்களும் அனைத்து மக்களின் மனதில்

நிறைந்து நிற்கும் எனவும் அவரின் முயற்சிகள் பெற்றி பெற

அனைத்துத் தமிழ் மக்களும் ஆதரவு வழங்க வேண்டி

வாழ்த்துகின்றோம்.