மூத்த மொழி..


உலகின்
முதன் மொழி
தமிழ் என்பதன்
முதல் அடையாளம்
காகம்…..
ஆகாயம்
பூமி நீர் நிலம்
நெருப்பு என
தோன்றிய
காலத்தே
தளைத்த தமிழ்….
சத்தங்களை
கொண்டே பெயர்களை
சூடியவன்
தமிழன்.
காகா என
கரைதல் கண்டு
காகம் என
பொருத்தமாக
அழைத்தவன்
தமிழன்…
சலசல எனும்
ஓசை கேட்டு
சலம் என
சூடியவனும்
தமிழன் தான்…
ஆழச் சிந்தி
நீளக் கிடைக்கும்
தரவுகள்.அது
கொண்டு
நிறுவிடு எங்கள்
அன்னை தமிழே
மூத்தவளாவாள்…