வீழ்த்தமுடியாத காலப்படைப்புக்கள் …..!

அஞ்சுதலில் இருந்து 
வெளிப்படும் வலிய 
நெஞ்சுரம் தெருவெளி 
நாடகங்கள்,

துன்பத்தின் 
தீய ஒளியை அணைத்து 
விடுதலைக் காற்றில் 
எங்கள் ஆன்ம சுவாசத்தை 
புகுத்திய வல்லமை 
எங்கள் தெருவெளி 
நாடகத்தின் ஆளுமை ,

விடுதலை சிறகின் 
வீரிய விதைகளை 
வீழ்த்தமுடியாத 
விருட்ஷமாக்கிய 
உயிர்ப்பிடம்,

தே.பிரியன் .