டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டு 10 வது ஆண்டு ஆண்மீகப்பெருவிழா

நேற்றையதினம் டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் 10 வது ஆண்டு ஆண்மீகப்பெருவிழா சிறப்பாக நடந்தேறியது.. பத்தாயிரத்து ஐநூறு தமிழர்களை கொண்ட இந்த சிறியநாட்டில் வாழும் இளையதலைமுறையினர் பணிசைப்போட்டிகளிலும், பேச்சுப்போட்டிகளிலும் பங்குபற்றி பல தங்கப்பதங்கங்கள் மற்றும் பரிசில்கள் பெற்றமையை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

இங்கு நன்றே சைவம்வளர்க்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகிறது வில்லிசை, பரதநாட்டியம், இசைக் கச்சேரி, பட்டிமன்றம், இந்தியாவில் இருந்து வருகைதந்த டாக்டர் சைவச்செம்மல் பெரியபுராண பேரரசு சங்கரநாரயணன் தலைமையில் நடைபெற்றது. அதில் பங்குபற்ற வாய்ப்பு கிடைத்ததும் எம் தேச பெரும் எழுத்தாளர்கள் கவிஞர்களை ஒரே மேடையில் சந்தித்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி…என ரதிமோகன் பதிவிட்டுள்ளார்

சைவமும் தமிழும் தழைத்தோங்குக உலகமெலாம்..

Merken