வரம் தந்த மண்.


குரும்பசிட்டி
குரும்பை நகர்
என அழைப்பதில்
அளவிலா ஆனந்தமே..

படைப்பாளிகள்
எழுத்தாளர்கள்
நாடக ஆசான்கள்
செறிந்த பூமி…

கடல்கரை
தாளங்காயாக
மிதந்த என்னை
புடம் போட்ட புண்ணிய பூமி…

தமிழை பக்குவமாக
குழைத்து ஊட்டிய
உணர்வாளர்களின்
பட்டறையில் நிமிர்ந்தவன்

சன்மார்க்க சபை
நிகழ்த்தும் நாடக
விழாக்களை முன்
வரியில் அமர்ந்து ரசித்தவன்.

அம்மன் கோவில்
களை கட்டும் திரு விழாக்கள்.
கேணியடி நாம்
ஓடியாடி மகிழ்ந்த தளம்..

அடக்கமாகவும்
இறுக்கமாகவும்
உலாவரும் கோதையர்
நேயம் மிக்க மனிதர்கள்
மறக்க முடியுமா….

ஆறு வருடங்கள்
ஆதரவு தந்த நேசங்கள்
செல்லக் கணேசன்
மகேஸ்வரன் எனும்
இரு நண்பர்கள்…..

இன்று நான் ஓர்
நடிகனாய் நாடக
இயக்குனனாய் திகழ
உரமிட்ட மண்ணிணை
வாழ்வில் மறவேனே.

மூத்தகலைஞர் தயாநிதி