என்னப்பெற்றாலில் „கிராமிய பூபாளம்“


என்னப்பெற்றாலில் „கிராமிய பூபாளம்“

யேர்மனி என்னப்பெற்றால் நகரை மையமாகக் கொண்டு புங்குடுதீவு மக்களால் நடத்தப்பட்டு வரும் தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி மன்றத்தின் கிராமிய பூபாளம் எனும் நிகழ்வு 08.09.18 அன்று என்னப்பெற்றாலில் நடைபெற்றது.

 

அந்த விழாவில் ஐரி என் தயாரித்த மனநெருடல் குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

காத்தவராயன் கூத்தது,வலிசுமந்த தாய்

நடனங்கள் இடம்பெற்றுவிட்டன.

சிந்துநடைக் கூத்தான காத்வராயன் கூத்து உண்மையிலேயே அற்புதமாக இருந்தது.

மாவை சிவம் அதனை அருமையாக இயக்கியிருந்தார்.புலம்பெயர் நாடுகளில் இத்தகு கூத்துக்கள மேடையேற்றுவது மிகுந்த சிரமம்.

எல்லாச் சவால்களையும் தாண்டி இந்தக் கூத்து சபையோர் எழுந்து நின்று கைதட்டுமளவிற்கு பலரின் மனங்களை உசுப்பியுள்ளதை கவனிக்க முடிந்தது.

அனைத்துக் கலைஞர்களுமே மிகச் சிறப்பாக தமது பாத்திரங்களை உணர்ந்து நடித்திருந்தனர்.மாவை சிவத்துக்கும் மற்றும் அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டினைத் தெரிவிக்கிறேன்.

மாவை சிவத்தின் நெறியாழ்ழைகயில் உருவாகிய வலிசுமந்த தாய் என்ற நாடகம் பலரின் பாரட்டைப் பெற்றிருந்தது. எல்லொருமே சிறப்பாக நடித்திருந்தார்கள்.

தமது கிராமத்தின் பன்முக வளர்ச்சிக்காக இடையறாது தொண்டாற்றி வரும் புங்குடுதீவு மக்களைப் பாராட்டுகிறேன்.

அண்மை நாட்களில் இலங்கை சென்ற போது புங்குடுதீவு மண்ணைக் கடந்து நயினாதீவு செல்லும் வேளை எனது கண்கள் அங்குள்ள சூழலை உள்வாங்கிக் கொண்டன.