மண்ணில்வாழும்மனிததெய்வங்களே!

மனநலம் பாதிக்கப்பட்டு
அனாதைகளாய் வீதியிலே
அலைகின்றவர் எத்தனைபேர்

காதலின் தோல்வியாலும்
தொழில் நட்டத்தாலும்
ஏமாற்றப்பட்டு அலைபவர் எத்தனேபேர்

அழகான வாழ்வைத்தொலைத்து
போகுமிடம் தெரியாமல்
அலைகின்றவர் எத்தனைபேர்

வறுமையாலும் பிணிகளாலும்
தம்மையே யாரென்று தெரியாமல்
அலைகின்றவர் எத்தனைபேர்

அழுக்கான உடையோடு
உண்ண உணவின்றி வீதியிலே
அலைபவர் எத்தனைபேர்

இவர்கள் பசிஎன்று கையேந்தினால்
இவர்களைப்பாத்து பழிப்பவரும்
கிட்டவராதே உன்னில் நாறுது
என்றே பேசுபவரும் எத்தனைபேர்

இவர்களைக்காப்பது யாரிங்கே
இவர்களை மதிப்பது யாரிங்கே
இவர்களின் உயிருக்கு உணவு
கொடுப்பது யாரிங்கே

உயிர்மட்டும் கொண்டு அலையும்
இவர்களுக்கு உதவுகின்றவர்கள்
மண்ணில் வாழும் மனிததெய்வங்களே
இந்தமனிததெய்வங்களால்தான்
ஓரளவு இந்த உலகம் சுழல்கிறது

அன்பை விதைப்போம் தர்மம் செய்வோம் மனிததெய்வங்களாய் நாமும் மாறுவோம்

ஆக்கம் மயலையூந்திரன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert