எசன் அறநெறிப்பாடசாலையின் 15 ஆவது ஆண்டுநிறைவுவிழாவும் கலைமாலையும்.

எசன் அறநெறிப்பாடசாலையின் 15 ஆவது ஆண்டுநிறைவுவிழாவும் கலைமாலையும்.
………………………………………………………………………..
2.3.2019.சனிக்கிழமை.

2003 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எசன் அறநெறிப்பாடசாலை இவ்வாண்டு 15 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது.ஏறக்குறைய 260 க்குமதிகமான பிள்ளைகள் அறநெறிப்போதனையை பெற்றிருக்கிறார்கள்.வாழ்க்கைக்கு அவசியமான அறநெறிக்கருத்துக்களையும், நன்நெறி,வாக்குண்டாம்,ஆத்திசூடி,கொன்றை
வேந்தன்,திருக்குறள்,இதிகாசங்கள்,சைவ நெறி, ஏனைய சமய பொதுக்கொள்கைகள்,என வாழ்வியலுக்கு அவசியமானவற்றைக் கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
பொறுப்பாளராக ஆசிரியை சசிகலா விஜயனும்,ஆசிரியை கலையரசி ரவீந்ரசிவம்,நயினை விஜயன் ஆகியோர் கடமையாற்றிவருகிறார்கள்.எதிர்வரும் 2.3.2019 சனிக்கிழமை.அன்று 15 ஆவது ஆண்டு நிறைவு விழா, கலைமாலையாக பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள், அபிமானிகள் ஆகியோரின் பங்களிப்போடு சிறப்பாக நடைபெறவிருக்கின்றது.இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவிரும்புபவர்கள்,தொடர்புகொள்ளவும்,
விபரங்களுக்கு. 017655778752.குழந்தைகளுக்கான மதிப்பளிப்பில் வள்ளல்களும் தம் கரம் கொடுக்கலாம்.நன்றிகள்.