எதிரும் புதிரும்.


ஒத்த முனைகள்
ஒன்றை ஒன்று
எதிர்க்கும்..
ஒவ்வாதவை
ஒன்றை ஒன்று
ஈர்க்கும்….
இந்த அலகு
பௌதீகவியலில்
கற்ற விதியாகும்.
நடை முறை
நடப்புக்குள்ளும்
நலிந்திருக்கும்..
எதிர் மறை
பேச்சும் எழுத்தும்
பொதுமறையாகும்.
கருத்துக்களின்
மோதலில் புதிய
கருக்கட்டல் நிகழும்…
பிரசவம்
கவிதைகளாகவோ
கட்டுரைகளாகவோ
கதைகளாகவோ
நாவலாகவோ நீளும்..
எழுத்தாணிகளின்
வீச்சில் வடிவங்கள்
நூல்களாவதும் கண்கூடு.
எங்கோ எவரோ எவருக்காகவோ
எழுதப்படும் யாப்பில்
சுயநலம் கடந்த
நலனிருக்கும்..
வாதங்கள்
விவாதங்களாகி
பாதக சாதகங்கள்
முட்டாமல் பயணித்து
செல்வதே வாழ்வியலாகும்.

ஆக்கம் கவிஞர் தயாநிதி