கவிஞர் கி.பி அரவிந்தன் அவர்களது நினைவாக நடாத்திய “ குறும்படத் திரைக்கதை போட்டி „

“ இலக்கு „

சிலர் சில பழக்க வழக்கங்களை செயல்களை முற்றிலுமாக விட்டுவிட எண்ணுவார்கள், ( அப்படி தான் அடிக்கடி இத் துறையை நினைப்பேன் ) சிலர் ஓய்வு நேரங்களில் ஆக்கப்பூர்வமாக செயல்பட புது இலக்குகள் வைப்பார்கள். ( புது தொழில் தொடங்க நினைப்பேன் ) 
ஆனால் நடக்கிறதா இல்லை.

காக்கை சிறகினிலே இதழ் முதல் முதலாக 
கவிஞர் கி.பி அரவிந்தன் அவர்களது நினைவாக நடாத்திய “ குறும்படத் திரைக்கதை போட்டி „

இந்த « குறும்படத் திரைக் கதைப் போட்டி » தமிழ் இலக்கிய எழுத்துப் போட்டி வகையில் ஈழத்து திரைத்துறையில் முதல் முறையாக „திரைக்கதைக்காக“ நடாத்தப்படடிருக்கிறது. இந்த முதற் போட்டியின் கதைக் களம் : «இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை» எனவாக அமைந்திருந்தது.

போட்டி அறிவிப்பு கண்டதும் இப் போட்டியில் பங்குபற்ற மனம் ஒப்புக்கொண்டது நேரம் ஒத்துக்கொள்ளவில்லை.
என்னிடம் கதைக்கு பஞ்சம் இல்லை இன்னும் பல்லாயிரம் கதைகள் இருக்கிறது இருந்தும். ஒரு கதைக் கருவை திரைக்கதை ஆக்குவது என்பது சுலபம் அல்ல போட்டி அறிவுப்பு வந்த நாள் முதல், 
நேரம் கிடைக்கும் போது எழுதலாம் எழுதலாம் என இருந்துவிட்டேன். முகநூல் பார்க்கும்போது போட்டிக்கான முடிவு தேதி அவ்வப்போது ஞாபகம் வரும். வழமைபோல குறுப்பட போட்டி நடைபெறும் போது முடிவுதேதி கடைசி வாரம் படப்பிடிப்புக்கு போவோம் அதுபோல, போட்டி முடிவுக்கு 4லு நாள் முன்பு எழுதத்தொடங்கி, போட்டி முடிவு இறுதி நாள் அன்று அனுப்பினேன். ஒரு திரைக்கதையை பொறுமையாக எழுதவேண்டும் அதற்க்கு எனக்கு நேரம் ஒத்துழைக்கவில்லை.. இருந்தும் திரைக்கதை போட்டியிலும் எழுதவேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..

நடுவர் குழுவாக : 
1. மதிப்புக்குரிய திரைத்துறைப் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் (அமெரிக்கா) Swarnavel Eswaran
2. மதிப்புக்குரிய திரைச் செயற்பாட்டாளர் அம்ஷன் குமார் (இந்தியா) filmmakers Amshan Kumar
3. மதிப்பிற்குரிய குறுந்திரைச் செயற்பாட்டாளர் ஞானதாஸ் காசிநாதர் (இலங்கை) filmmakers Gnanadas Kasinathar

சிறிய இலக்குகளை வைப்பது என்பதே வெற்றி அல்ல. நீங்கள் உண்மையில் உங்களுடைய உறுதிஏற்பை எவ்வளவு தூரம் கடைபிடிக்கிறீர்கள் நீண்ட கால இலக்குகளை அடைவதற்கு என்ன முயற்சி எடுக்கிறீர்கள் என்பதே முக்கியம்.
ஒரு பெரிய இலக்கு வைப்பதற்கு முன்னால் சிறிய இலக்கை திட்டமிடுங்கள் என்பார்கள் ஆனால் 
இது சிறிய இலக்கு அல்ல, மிக பெரும் இலக்கு….

மிக முக்கியனான மதிப்புக்குரிய நடுவர்கள், அத்துடன் போட்டியில் பங்குபற்றிய திரைக்கதை எழுத்தாளர்கள் கிட்ட தட்ட 25 இருந்து 30 பேர் வரை பங்குகொண்டார்கள். 
இப் போட்டியில் நடுவர்களால் பரிந்துரைத்து கிடைத்திருக்கும் „விருது“ மகிழ்ச்சி அளிக்கிறது..

திரைக்கதை போட்டியில் பங்குபற்றிய எழுத்தாளர்களுக்கும் போட்டி நடாத்திய Mukunthan Kandiah Mukilan – காக்கை குழுமத்திற்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

?நன்றி?