கிராமிய பூபாளம் 2017 (நெஞ்சம் இனித்த கலைமாலைப் பொழுது)

கிராமிய பூபாளம் 2017
(நெஞ்சம் இனித்த கலைமாலைப் பொழுது)

யேர்மனியில் இயங்கி வரும் புங்கையூர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியத்தின் கிராமிய பூபாளம் 2017 கலைமாலைப் பொழுது நிகழ்வு கடந்த 30.09.2017 அன்று மிகவும் சிறப்பாக என்னப்பெற்றால் நகரில் மனம் கொள்ளத்தக்க வகையில் இடம்பெற்றிருந்தது.

இவ்வமைப்பானது, புங்கையூரின,; அங்கு வாழும் மக்களின் வாழ்வாதரங்களின் தேவைக்கமைய பல உதவிகளைச் செய்து வருகின்றது.

குறிப்பாக சர்வோதய அமைப்பு இப்பொழுது ஒரு சிறிய தொழிற்சாலையை நடத்தி வருகின்றது. இத்தொழிற்நசாலையில் மிளகாய், அரிசி, ஒடியல், குறிஞ்சா இலை போன்றவை மாவாக அரைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.இத்தயாரிப்புகள் யாவும் சுகாதாரமிக்கவையாகவும், இயற்கை உணவாகவும் இருந்து வருகின்றன.

அமரர் திரு.க. திருநாவுக்கரசு அவர்களுக்குப் பிறகு
இவ்வமைப்பை செல்வி.க.புஸ்பமணி அவர்களும் செல்வி.பொ.ஜமுனாதேவி அவர்களும் நடத்தி வருகிறார்கள். இத்தொழிற்சாலையில் பல பெண்கள் வேலை செய்து வருகிறார்கள்.

30.09.2017 அன்று நடைபெற்ற கலைமாலைப் பெபாழுது விழாவிற்கு, சர்வோதயத்தின் அறங்காவலரான செல்வி.பொ.ஜமுனாதேவி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

இவ்விழாவில் உரைகள்,நடனங்கள்,குதிரையாட்டம், கரகாட்டம்,தாளலயம்,வில்லுப்பாட்டு, நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் சபையோரை மகிழ்விக்கும் விதத்தில் சிறப்பாக இடம் பெற்றிருந்தன.

தமிழர்களின் பாரம்பரிய கலைகளான குதிரையாட்டம், கரகாட்டம் போன்றவை தாயகத்திலே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று அருகி வருகின்றன.அந்த நிலையில் புலம்பெயர் நாடான யேர்மனியில் இக்கலைகளை வளர்த்து வருபவர் மாவை சிவம் அவர்கள்.

தமிழர்களின் கலை அடையாளமாக இப்படியொரு கலை இருப்பதை தமிழர்களே மறந்து கொண்டிருக்கும் நிலையில் இக்கலை நிகழ்ச்சியைப் பார்த்த சபையோர் பெருமகிழ்வு கொண்டனர்.

தாளலயத்திலும், நாடகத்திலும் இளந்தலைமுறையினர் பங்குபற்றி தமது ஆளுமையை வெளிப்படுத்தியிருந்தார்கள்.இந்நிகழ்ச்சிகளில் இளந்தலைமுறையினரையும் பங்குபெறச் செய்த அவற்றின் தயாரிப்பாளர்களின் சமகாலச் சிந்தனை பாராட்டப்பட வேண்டியதே.

திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியத்தின் மகளிர் அணியினரும் நிர்வாக கட்டமைப்பு, என்னப்பெற்றால் நகர மக்கள் அயல் நகரத்தினர் என பலர் அர்ப்பணிப்புடன் உழைத்த இவ்விழாவைச் சிறப்படையச் செய்திருந்தனர்.புங்கையூரைச் சேராத பலரும், புங்கையூரும் தமது ஊரே எனப் பற்றுக் கொண்டு இவ்விழாவின் வெற்றிக்காக உழைத்திருந்தனர்.

இந்நற்பணி ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் அவர்கள் இவ்விழாவிற்காக அயராது செயல்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
விழாக்களில் மேடையேற்றப்படும் கலை நிகழ்ச்சிகள் யாவுமே காத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடன நிகழ்ச்சிகளைத் தயாரித்த செல்வி.சாரா செல்வராசா தாளலயம், வில்லுப்பாட்டு தயாரித்த மாவை சிவம் அவர்களும் நாடகத்தை எழுதி இயக்கிய ஏலையா க.முருகதாசன் அவர்களும் பொறுப்புடன் கடுமையாக உழைத்திருந்தனர்.இவற்றில் பங்குபற்றிய கலைஞர்களின் கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகவும் போற்றத்தக்கதாகி வெற்றிக்கு உரியவர்களானார்கள்..

எப்பொழுதும், நோக்கத்தின் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு கலை நிகழ்ச்சிகள் ஏனோதானோ என்றிருப்பதுண்டு. ஆனால் இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகள் யாவுமே தரமாக இருக்க வேண்டுமென்பதற்காக நிகழ்ச்சிகளைத் தளயாரித்தவர்கள் உட்பட அவற்றில் பங்கு கொண்ட அனைவருமே கடுமையாக உழைத்தமையினால்தான் அவை மேடையேறிய போது சபையோரின் பாராட்டைப் பெறுவண்ணமிருந்தது.

கலை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் அதில் பங்கு கொண்ட அனைவரையும் ஒருங்கிணைத்து தனது பணியைச் சிறப்பாகச் செய்த திருமதி.நந்தினி செல்வராசா அவர்களைப் பாரட்டுகிறேன்.
அதே போல, தாளலயம்,வில்லுப்பாட்டு, நாடகம் போன்றவற்றில் பங்கு கொண்ட அனைவரையும் பாராட்டுகின்றேன்.

அனைவரின் பெயர்களையும் இரண்டொரு நாளில் இங்கே பதிவு செய்யவுள்ளேன்.

Merken