குளர் கால வெண்பனி !கவிதை ஜெசுதா யோ

குளர் கால வெண்பனி
விண்ணிலிருந்து
மண்ணுக்குவரவில்லை
ஆனாலும் குளிர் மட்டும்
உறைந்து கிடக்கிறது ..

உடல்கள் விறைத்து
உதடுகள் வெடித்து
உருவம் மாறியே ..
ஆணென்றும்
பெண்ணென்றும்
அடையாளம் தெரியாது..

மூடிய உடையில்
முக்காடு வேறு
இருந்தும் ஓய்வில்லை
ஓடுகிறான் மனிதன்
வேலைப்பழுவில்..

எல்லாம் மறந்து வாழ்கிறான்
உறவுகளுக்காய்
ஓய்வின்றி தினம் தினம்
முடியாத பயணமாக
தொடராகிப் போகிறது..

நாற்பதில் ஐம்பதின் தோற்றமும்
பாதி வயதில் பாழப்போன நோயும்
வாழ விடாது வலிகொடுத்து
பறித்துச் செல்கிறது
பலரது உயிர்களை….

புலத்தில் நம்மவர் நிலமையிதுவன்றோ
இதையறியாது
ஈழத்தில் வாழும் உறவுகளோ
பணம் எனும் போதைப்பொருளுக்குள்
முன்னுக்குப்பின்
முரணான பேச்சும்
வசைபாடி வாய்மட்டுமில்லையென்றால்
வலுவிழந்தோர் நிலைதான்
பலரது வாழ்வும்

(வேதனை) புரிதல் இல்லாத
மனிதர்களால்…

ஜெசுதா_  ஆக்கம் ஜெசுதா யோயோ