சிறையிருக்கும் கவிஞர் விவேகானந்தனூர் சதீஸ் அவர்களின் கவிதைநூல் வெளியீட்டு விழா.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சிறையிருக்கும் கவிஞர் விவேகானந்தனூர் சதீஸ் அவர்களின் கவிதைநூல் வெளியீட்டு விழா.

சிறையிருக்கும் கவிஞர் விவேகானந்தனூர் சதீஷ் அவர்கள் எழுதிய ‚சிறையிலிருந்து சிங்கள சகோதரனுக்கு‘ கவிதை நூல் வெளியீடு மற்றும் ‚விடியலைத் தேடும் இரவுகள்‘ கவிநூல் அறிமுகம் என்பன 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது. காவ்யாலயா வெளியீடு செய்த இந்நிகழ்வானது இணுவையூர் சிதம்பரச்திருச்செந்திநாதன் தலைமையில் இடம்பெற்றது. வரவேற்புரையினை கவிஞர் கொட்டடி கோமகன் நிகழ்த்தினார். அறிமுக உரையினை கவிஞர் கை.சரவணன் நிகழ்த்தினார். வெளியீட்டுரையினை அஜந்தகுமார் நிகழ்த்தினார். நூலினை சிறையிருக்கும் கவிஞர் விவேகானந்தனூர் சதீஸ் அவர்களின் தாயார் திருமதி மகேஸ்வரி அவர்கள் வெளியிட்டுவைக்க யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதியினை படைப்பாளிகள் உலகம் நிறுவுநர் ஐங்கரன் கதிர்காமநாதன் பெற்றுக்கொண்டார். கல்விக்கூடங்களுக்கும் நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன. நூலின் ஆய்வுரையினை சித்திராதரன் நிகழ்த்தினார். நன்றியுரையினை நூலாசிரியரின் புதல்வி செல்வி சதீஸ்குமார் காவியா நிகழ்த்தினார். சிறையிருக்கும் கவிஞர் விவேகானந்தனூர் சதீஸ் அவர்கள் இதுவரை மூன்று கவிதை நூல்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வு நிறைவான பின்னர் அரசியல் கைதிகளின் விடுதலைவேண்டி குரல்கொடுப்பும் இடம்பெற்றது.