சுவிஸில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்தரின் 126வது ஆண்டு விழா

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126வது ஆண்டு விழா சுவிஸ்லாந்து நாட்டில்  சனிக்கிழமை 07.04.2018  இல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது..

Olten  நகரில் அமைந்துள்ள Kirch Trimbach,  Chappeligass 39, 4632 Trimbach, Olten  எனும் இடத்தில்  பிற்பனல்2.00மணிமுதல்  மாலை 10.00 மணிவரை நடைபெற்றநிகழ்வில் பரதநாட்டியம் உட்பட பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

வே.ஜெயக்குமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் தலைமையுரையினை ஜேர்மன் தமிழ் கல்விச்சேவையின் தலைவர் பொன்னுத்துரை ஜீவகன் நிகழ்த்தினார்.

சிறப்புரையினை எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் ,கலாநிதி கல்லாறு சதீஸ் ஆகியோர் நிகழ்த்தியதுடன் பல்வேறு ஆர்வலர்கள்  சுவாமி விபுலானந்தர் சம்பந்தமான உரையினையும் நிகழ்த்தினர், அத்துடன் கவிதை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கனடாவிலிருந்து வருகை தந்த பாபு வசந்தகுமார் விபுலானந்தரின் ஆவணப்படம் உட்பட தீர்த்தக்கரையினிலே எனும் இறுவெட்டியினையும் வெளியிட்டு வைத்தார்.

சுவிஸ்நாட்டில் விபுலானந்தருக்கு முதல் முறையாக நடைபெற்ற இவ்விழாவில்  கனடா ஜேர்மன்  பிரித்தானியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.