டென்மார்க் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளிவிழா எதிர்வரும் 30/11/2019

டென்மார்க் தலைநகர்
கொப்பன்ஹேகன் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளிவிழா எதிர்வரும் 30/11/2019
அன்று மாலை 3.00 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் கோலாகலமாக ஆரம்பமாகி இடம்பெற இருக்கிறது.

இலங்கை, இந்தியத் தமிழர்கள் இணைந்து நடாத்தும் இந்த பண்டிகை ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டமென பல கலை நிகழ்வுகளும் பல பாகங்களில் இருந்தும் கலைஞர்கள்,கவிஞர்கள் பேச்சாளர்கள், வருகைதந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.

விசேடமாக கெளரவ விருந்தினராக ..
(இந்திய மக்களவை உறுப்பினர் தமிழ்நாடு )
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்.)
தொல் திருமாவளவன் அவர்கள் கெளரவ விருந்தினராக சிறப்பிக்க இருக்கிறார்.

கீதாலயா கலைக்கல்லூரி மாணவர்களின் நடனம் உட்பட்ட பலவிதமான நடனங்கள், கவியரங்கம், தமிழோடு விழையாடு போன்ற
பல கலை நிகழ்வுகளுக்கு மத்தியில்

துறைசார்ந்த பிரபலமானவர்களின் சிறப்புரைகளும் ,
சிறப்பு ஒளிப்பட ஆய்வுக் கானொளிகளும்
இடம் பெற இருக்கின்றன.

தலைமை உரை
திரு. மோகனராஜா
தலைவர் கொப்பன்ஹாகன் தமிழ் பாடசாலை

டாக்டர் க. சுஹாசினி சேர்மனாக. தலைவர்
உலகத் தமிழ் அறககட்டளை .
ஓலைச்சுவடி ஆராட்சியாளர்.

திரு. கோவிந்தராஜா.
தமிழ்நாடு அரச ஆவண சுவடிகள் பதிப்பாளர்.

கவிஞர் இணுவையூர் சக்திதாசன்.

சட்டத்தரணி. திரு. கெளதம் சன்னா
தமிழ்நாடு இந்தியா.

திரு. தர்மகுலசிங்கம்
தலைவர் உலகத் தமிழ்பண்பாடு இயக்கம்- டென்மார்க். இணைப்பாளர் உலகத் தமிழ் மரபு அறக்கட்டளை.

மட்டுப்படுத்தப்பட்ட இருக்கைகள் கொண்ட மண்டபம் என்பதால்
நிகழ்வுக்கு வரவிரும்புகின்றவர்கள் முன்கூட்டியே கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு ஆசனங்களை முற்பதிவு செய்துகொள்ளும்படி கேட்கப்படுகின்றனர்.

உணவு உட்பட ஒரு நபருக்கு 100kr

தொடர்புகளுக்கு ;- கார்த்திக் . 0045/61225619