திருக்குறள் நூல் வெளியீட்டு விழா ஜேர்மனியில் சிறப்பாக நடந்தேறியது ! தகவல் இரா. சம்பந்தன்



கவிஞர் . நா . தேவதாசன் எழுதிய திருக்குறள் கவிதை நூல் வெளியீட்டு விழா
11 – 02 – 2023 அன்று ஜேர்மனி -இராட்டிங்கன் நகரில் மண்டபம் நிறைந்த மக்களோடு
மிகச்சிறப்பாக நடைபெற்றது . விழாவின்போது திருமதி ஈஸ்வரி தேவதாசனும்
எனது துணைவியாரும் சேர்ந்து மங்கல விளக்கேற்றினர் .

தமிழ்த்தாய் வாழ்த்தை திருமதி .சாந்தமலர் இரத்தினசிங்கமும் , வரவேற்புரையை
செல்வி. சுபைதா இரவீந்திரநாதனும் , ஆய்வுரையை கவிச்சுடர் –
அம்பலவன் புவனேந்திரன் அவர்களும் , சிறப்புரைகளை மண்சஞ்சிகை ஆசிரியர்
திரு . சிவராசா அவர்களும், ஜேர்மனி தமிழர் எழுத்தாளர் சங்கத் தலைவர்
திரு .ஶ்ரீ .ஜீவகன்அவர்களும், எழுத்தாளரும் ஏலையா சஞ்சிகை ஆசிரியருமான
திரு. முருகதாஸ் அவர்களும், கவிவாணன் இரா . சம்பந்தன் அவர்களும் நிகழ்த்தினர்.

வாழ்த்துரைகளை முன்னாள் தமிழர் புனரமைப்பு ஒன்றியத்தின் தலைவரும்
திருப்பணிச் செல்வருமான திரு . செல்வகுமாரன் அவர்களும் , முன்னாள்
ஒன்றியச் செயலாளர் திரு. கதிர்காமநான் அவர்களும் , ஜேர்மனி
தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியத்தின் அமைப்பாளரும்
வடஇலங்கைச் சர்வோதயத்தின் சர்வதேச அமைப்பாளருமான –
திரு. மகாலிங்கம் அவர்களும், கவிஞர் ஶ்ரீதாஸ் அவர்களும் நிகழ்தியிருந்தனர்.

சிறப்புரை ஆற்றிய கவிஞர் இரா. சம்பந்தன் வாழ்த்துமடலை அரங்கினில் வாசித்து
தனது இல்லக்கிழத்தியோடு சேர்ந்து நூலாசிரியருக்குக் கையளித்தார் .
தமிழருவிப் பத்திரிகை ஆசிரியரும் , ஜேர்மனி தமிழருவி வானொலி இயக்குநரும்
உலகத்தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் கலை கலாசாரப் பொறுப்பாளருமான
தமிழவேள் திரு. நயினை விஜயன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு
சிறப்புரை நிகழ்த்தியதோடு நூலாசிரியருக்கு செந்தமிழ்த்தேனீ என்னும்
விருது வழங்கிக் கௌரவித்தார்.

திருக்குறள் நூலின் முதல்பிரதியை திரு. செல்வகுமாரன் பெற்றுக்கொண்டார்.
இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் புதல்வர் திரு. பிரசன்னாஅவர்களும்
திருமதி. லிங்கேஸ்வரன் கலையரசி அவர்களும் மிகச்சிறப்பாக நிகழ்ச்சியைத்
தொகுத்து வழங்கி அரங்கிற்கு அணிசேர்த்தனர். விழாவின் முடிவில் நூலாசிரியர் கவிஞர் நா. தேவதாசன் நன்றியுரையோடு ஏற்புரை யாற்றினார் .
விழாவின் இடைவேளையில் சிற்றுண்டியும், முடிவில் இரவுநேர உணவும் வழங்கப்பட்டது .

இரா. சம்பந்தன் – ஜேர்மனி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert