நான்கு கவிஞர்களும் STS இன்பத் தமிழ் அரங்கில் . சந்த நடை, தாள இசையுடன் ,சுந்தரத் தமிழ்பாடினார்கள் (கவிஞர் முகில்வாணன்)

இன்றைய இன்பத் தமிழ்க் கவியரங்கில்
கவிவாணர் இரா சம்பந்தன் யேர்மனி
கவிஞர் வேதா இலங்கதிலகம் டென்மார்க்
கவிஞர் கலாநிதி க.மதிபாஸ்கரன் கனடா
கவிஞர் ஜென்னி ஐெயசந்திரன் பிரான்ஸ்
நான்கு பெரும் பாவலரும் சொற்சுவை சுந்தரிகளாய் நற்றமிழ் முற்றத்தில் நடனமாட வந்தார்கள் . ஒவ்வொரு கவிஞரையும் உற்று நான் பார்த்தேன் . அன்னை தமிழ்மொழியின் ஆழம் , அகலம் , நீளம் உயரம் என்ன என்ன என்பதனை அறியத் துடியாய்த்துடித்து , மூச்சடக்கி மூச்சடக்கி மூழ்கித் தேடித் தேடி எடுத்தவற்றை STS இன்பத் தமிழ் அரங்கில் எடுத்து இசைத்து மகிழ்ந்தார்கள் . சந்த நடை இருந்தது . தாள இசை இருந்தது சுந்தரத் தமிழ் உடுத்தியே சுற்றி நின்று பாடினார்கள்
வரலாறும் கற்பனையும் , வாழ்த்தொலியும் கேட்டது . ஒவ்வொருவர் தேடலிலும் ஒவ்வொரு சுவை இருந்தது . எல்லோரிடமும் நான் இனிய தமிழ் கற்றேன் . ஆற்றலுள்ள நம் புலவர்களை அறிமுகம் செய்து வைக்கும் அரங்கின் தலைமைக்கவிஞருக்கு அடியேனின்வாழ்த்துக்கள்

கவிஞர் முகில்வாணன்