நீ…நான் !

பூக்களின் புன்னகை தேசம் நீ
பூவே உனதழகை ஆராதிப்பவன் நான் !

புதுமைகளின் புதுவித அவதாரம் நீ – உன்
புன்னகைக்காய் தவிதவிக்கும் யாசகனாய் நான் !

மௌனமே பேசு பொருளென நீ
மௌனத்தில் ஒழிந்திருக்கும் வார்த்தையாக நான் !

அழகியல் கவிகளின் அரசியாய் நீ
அனுதினமும் பிரியமுடன் வாசகனாய் நான் !

நேசக்கணை பார்வையிலே வீசிப் போகின்றாய் நீ
சுவாசிக்க உனதருகைத் தேடுகின்றேன் நான் !

பார்வைகளில் படிந்துள்ள காட்சியாய் நீ
பார்வைக்குள் சிறைபிடிக்கும் ஆவலுடன் நான் !

தூரத்தில் இருந்தென்னை ஈர்க்கின்றாய் நீ
தூரமும் குறைகின்ற உன் நினைவுகளோடு நான் !

உள்ளத் தேடல்களின் முடிவிலி நீ
தேடித்தேடி உன்னில் தொலைகின்றேன் நான் !

வேலணையூர் ரஜிந்தன்.