***பால் நிலவு காய்ந்ததே***

பால் போன்ற அந்த வட்டநிலவானது,
பகல் போலவே தண்னொளி வீசுகையில், 
பனிச்சை மரங்கள் தம் பூக்களைத்தூவியே
பஞ்சனையாய் விரிந்து கிடைக்கையில் ,
பாவையவளோ, நாணத்தினால் சிவந்து,
படர்ந்துகிடந்த பூவையள்ளி தன் ஆடையாக்கிட,
பாவப்படுவதுபோல நானுமோ, அவளைநோக்கி
பரிகசித்தபடியே மெல்ல ,கிட்டே நெருங்கிட…..
பாழாய்ப்போன அந்த அலாரம்,,விர்ர்ரென,
பக்கத்தில் கிடந்து கத்திக் கூச்சலிட,
பஞ்சி முறித்தபடி வழமைபோலவே
படுக்கையை விட மனமில்லாது எழுந்து,
பணிக்கு தயாராகினேன் வர வழியில்லாது ,
பாதிவரை கண்டகனவின் மீதிநினைவோடு
பனிக்குள் நடந்து பணித்தளம் ஏகினேன்.
பாவிகள் நாங்கள் ,பண்ணுவதற்கு ஒன்றுமில்லை 
பணத்தைப்படைத்த ,பாதகரை நொந்துகொள்வோம். .
கனா நேசன்