புகைந்தது.

மண்டலங்கள்
பலவற்றின்
மனங்கள் புகைந்தன.

அச்சம்
கூடு கட்ட
ஒன்றாகத் திரண்டனர்.

தமிழன்
படை கண்டு
மிரண்டனர்.

சதி வலை
பின்னி பிணம்
தின்ன குவிந்தனர்

தடை செய்த
ஆயுதங்களால்
தாக்குதல் நிகழ்த்தினர்.

மரபு வழி
மறந்து சுற்றி
வளைத்தனர்
முற்றுகைக்குள்
முடிவு கட்ட தொடங்கினர்.

வெள்ளைக்
கொடிகளுக்கும்
அறம் மறந்து
நிறம் தீட்டினர்…

தஞ்சமானோர்
மீதும் வஞ்சம் தீர்த்தனர்.
எஞ்சியாேர் மீது
நச்சு திராவகம் வீசினர்..

வானம் மட்டுமா
மனித மனங்களும்
மனித நேயங்களினதும்
இதயமும் இருண்டது…

தமிழீழம்
புகை மண்டலமானது
மானுடம் மரித்த நாள்.
மே 18..

பத்து வருடம்
நெருடல் நீளுது
மீண்டும் இனவழிப்பு
தொடருது அங்கே….

வேற்றுமைகளின்
சிதைக்கு தீமூட்டுங்கள்
மாவீரர்களின் தியாக
தடங்களை தேடிப்
பயணிப்போம் வாருங்கள்.

கவிஞர் தயாநிதி