புங்குடுதீவு…

இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன் [கௌதமபுத்தர் பிறக்க முன்னர்] புங்கைமரம் புங்குடுதீவின் புகழை உலகில் மணக்க வைத்த பெருமையை சொல்ல விளைகிறேன்.

பாளி மொழியில் எழுதப்பட்ட பண்டைய புத்த சாதகக் கதைகளில் ‚பியங்குதீவு‘ [Piyangudipa] என்றும் ‚புவங்குதீவு‘ என்றும் புங்குடுதீவு அழைக்கப்படுகிறது. கிரேக்க, சீன, அரேபிய நாடோடிக்கதைகள் கூட புங்குடுதீவை, ‚குங்குமத்தீவு‘ எனச்சொல்ல, ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை
“ஈங்கிதன் அயலகத்து இரத்தினத் தீவத்து
ஓங்குயர் சமந்தத்து உச்சி மீமிசை”
என ‘இரத்தினத் தீவகம்’ என்று சொல்கிறது…..

#புங்குடுதீவு….!!

புங்கை மரம் நின்றனவோ
பூங்கொடிகள் வந்ததாலோ
புங்குடுதீவு வெனப் பெயர் பெற்றதோ.?

ஒல்லாந்தர் ஆட்சியிலே
உயர்வுபெற்ற வெளிச்சவீடு
அதனின் சிறப்பாக
ஐந்து செக்கனுக்கு ஒருமுறை
ஒளிகொடுத்து திசைகாட்டிய
ஊரின் சிறப்பானதுவாம்..

ஈழத்தின் ஏழு தீவில்
தலையாய தீவாம்
அதனுள் எத்தனை குடாக்கள்
எத்தனை முனைகள்
பார்வைக்கு அழகாய்
கண்கவர் தீவாம்…

வேலணையின் வாணர்
பாலத்தின் தொடராய்
பயன்பெறும் மக்களின்
விவசாயமும் கால்நடையும்
கடல் வளமும்
சிறப்புற்ற தொழிலதுவாம்

எத்தனை கோவில்கள்
எத்தனை கிறிஸ்த்தவ ஆலயங்கள்
அத்தனையும் தன்னகம் கொண்ட
சிறப்பான தீவதுவாம்

எழுத்தாளர்கள் கலைஞர்கள்
அறிவு முதிர் ஆன்றோர்கள்
சான்றோர்கள் வளமுடன் வாழ
வழிகாட்டிய பெரியோர்கள்
வாழ்ந்த ஊரதுவாம்..

இன்னும் எத்தனை சிறப்பு
சொல்லிட வார்த்தைகள் இல்லையே
இசைக்கலைஞர்கள் எழுத்தாளர்கள்
திரைப்பட கலைஞர்கள்
ஊடகவியலாளர்கள்
சமூக சேவை அமைப்புக்கள்..
விரிந்து செல்கிறது…

சொல்லில் அடங்காத
இத்தீவின் சிறப்பு எழுத
எண்ணில் அடங்கா
வார்த்தைகள் தேடி
வடித்தேன் துணைகொண்டு..
நானும் சிறு கவியொன்று…#

ஜெசுதா_யோ