„நீ தமிழன் தான் „!கவிதை ஜெசுதா யோ

 

தேசங்கள் பல கடந்து
நாம் வாழ்ந்தாலும்
மொழிகள் பல
நாம் பேசினாலும்
உடைகளை நாம் மாற்றி
அணிந்து கொண்டாலும்

எங்கள் நடைமுறை வாழ்க்கையை
மாற்றிக் கொண்டாலும்
எங்கள் எண்ணங்களை கூட
நான் தமிழர் இல்லையென்ற கருவிற்கு அப்பால் புதுப்பித்துக் கொண்டாலும்

நாங்கள் பெற்ற பிள்ளையை
ஆரம்ப பள்ளிக்கு அழைத்துச்
செல்லும் பொழுது
அங்கே கேட்கப்பட்ட முதல் கேள்வியில்

உனது பிள்ளைக்கு தாய் மொழி
நன்றாக பேசத் தெரியுமா..??
என்பதோடு
இதுவரை எம்மைப்
வேற்று நாட்டவர்ரென
வணர்ணனை செய்த
அத்தனையும்
ஒரே ஒரு நொடியில்

„நீ தமிழன் தான் „
அகதியாகத்தான்
இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்..!
என்ற ஒரு சொல்லுக்குள்
எல்லாம் அடக்கப் பட்டுவிடுகிறது.

இதனையும் மறந்து எம்மவர்களின்
நுணி நாக்கு ஆங்காலமும்
தமிழ் எனக்கு மொழியில்லையென்ற
வார்த்தையும்
தமிழ் என்றால் அவமானம் என்பது
பலரிடன் நான் கண்ட உண்மையின் சாரல்களாக
வேதனையின் உச்சங்களே
என்னை எழுதவைத்தது,..//

ஆக்கம் ஜெசுதா யோ

Merken

Merken

Merken

Merken