தாய்க்கொரு கவிதை…..

உதிரத்தை உணவாக தரும் தாயைப் போல யாரு
உலகத்தில் தாயைப் போல உன்னதம் இருந்தால் கூறு
உயிர்களெல்லாம் வணங்கும் மாபெரும் சக்தி தாயாரு
உயிரைப் போல உன் தாயை வைத்து உலகில் நீ வாழு

பெத்த கடன் தீர்த்த பிள்ளை பூமியிலே பிறக்கவில்லை
பெத்த பிள்ளை ஊனம் என்றால் தாய் முகம் சுளிப்பதில்லை
பட்ட துன்பம் சொல்லி தாய் என்றும் வளர்ப்பதில்லை
பட்டினியில் உன்னை விட்டு தாய் வாழ்ந்ததில்லை

ஈ ,எறும்பு மொய்த்தாலும் துடி துடிக்கும் தாய்மனம்
ஈரேழு ஜென்மம் எடுத்தாலும் தாய் போல யாரு வரும்
ஈருடல் சுமக்கும் தாயொரு உலகில் அதிசயம்
ஈன்ற தாயைத் துதித்தால் அதுவே உலகில் மோட்சம்

மறுபிறப்பில் தாய் பிறப்பாள் உன் மகளாக
மறுமையிலே நீ நுழையும் சொர்க்கம் தாயால
முதுமை வரை அரவணைத்து காத்துவிடு நல்மகனாக
முதிர்யோர் இல்லம் சேர்த்துவிட நினைத்திடாதே வீணாக..

கவித்தென்றல் ஏரூர்