தரிசுக் காட்டுப் பூவே

தண்ணியில்லாக் காட்டிலும்
தானாய் வளர்ந்து பூக்கும்
தரிசு நிலத்துப் பூமரத்தை ,
தறித்து எறிந்து விட்டு,
தரமென வேறு செடி நட்டு மகிழும்
தரங்கெட்ட எண்ணங்கொண்ட
தற்குறித்தனத்தை என்ன சொல்வது ,
*
தன் மகளை, செழித்து நிற்கும்
தனவான் ஒருவனோடு வாழவைக்க எண்ணி ,
தளிர்த்து வந்த காதலுக்கு
தடை போட்டுப் பிரித்து ,
தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற
தனையனுக்கு மணம் முடிக்கும்
தாய் தந்தையரையே ஒத்து நிற்கிறது,
*
தரிசுக்காட்டுப் பூக்கள் ஒன்றும்
தற்காலிக செடியில் மலர்வதில்லை
தனவானோடு வாழும் வாழ்வைவிட நல்ல
தன்மானமுள்ளவனோடு வாழ்வதே சிறந்த
தாம்பத்திய வாழ்க்கை என்பதை
தாமாக உணரும் காலம் வரவேண்டும் . ..
*.
தாம்பத்திய நேசன்