அந்தி மாலைப்பொழுது !கவிதை நகுலா சிவநாதன்

அந்தி மாலைப்பொழுது
ஆதவன் ஒளியின் ஆனந்தப்பிரசவம்
கண்ணைப்பறிக்கும் கதிரொளி
விண்ணின் பலவர்ணயாலம்
விந்தையாய் மகிழ்வு தருகுதே!

ஆற்றோர மணல் காற்றோரம்
தென்றலின் சுகம்
அலையின் ஆர்ப்பரிப்பு
அத்தனையும் ஆனந்தத்தின் எல்லையே!

சாலையோர தென்னை மரமும்
சாய்ந்து நிற்கும் வண்ணமயமும்
சோலையோர அழகும்
வசந்தத்தின் எழிலைக் காட்டுதே!

கடலோரக்காற்று தென்றலின் வருடலாய்
தேகத்தை மெல்லத் தடவிச் செல்ல
மாலை நேரம் கடந்து செல்கிறதே!

ஆக்கம் கவி- நகுலா சிவநாதன்