இனியநந்தவனம் ஆசிரியர் திரு.த.சந்திரசேகரம்அவர்களுடன் இலக்கியக் கலந்துரையாடல் தமிழ் எழுத்தாளர் சங்க ஆதரவில் இடம் பெற்றது

இன்று யேர்மனி காமன் நகரில் (19.05.2019) தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு இனியநந்தவனம் ஆசிரியர் திரு.த.சந்திரசேகரம் ஈழத்தைபிறப்பிடமாகவும் தாய் தமிழ் நாட்டைவாழ்விடமாகவும் கொண்ட த.சந்திரசேகரம் அவர்களுடன் இலக்கியக் கலந்துரையாடல் இடம் பெற்றது, இதில் இன்றய தினம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என இணைந்த சந்திப்பாக மதியம் 1.30 மணியளவில் ஆரம்பித்து மாலை 5.30 மணிவரை பல்கலை விடையங்கள் பற்றியும் சிறப்பாக கலந்துரையாடப்பட்ட ஓர் சந்திப்பாகவும், படைப்பாளிகளுக்கு ஓர் நல்ல சந்திப்பாகவும் இருந்தது இதில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகளின் வேண்டுகோளில் பெயரில் வெற்றிமணி, சிவத்தமிழ் ஆசியர் சிவகுமாரன் ,ETR வானெலி இயக்குனரும், அகரம், அகரம் தீரபம் சஞ்சிகை இயக்குனர் ரவீந்திரன்,STS தமிழ்TV stsstudio.com, ststamil.com, eelattamilan.com, eelaoli.com ,இணைய நிர்வாகி S.தேவராசா தமிழ் Times இயக்குனர் தவா, எழுத்தாளர் ஆய்வாளர் சபேசன் இளம் ஊடகவியலாளர் வசந்-வி,என இணைந்து .த.சந்திரசேகரம் அவர்களுக்கும் சாகித் பாட்சா அவர்களுக்கும் மாலைகளும் பொன்னாடைகளும் அணிந்து கௌரவிக்க தமிழ் எழுத்தாளத்தாளர்சங்க உறுப்பினர்களுடன் இணைந்து தலைவர் அம்பலவன் புவனேந்திரன் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார் இதுபோன்ற நல்லார்வம் உள்ள சந்திப்புக்கள் தொடர வாழ்த்துக்கள்