உயிரிழந்த ஒரு உல்லாச தினம்

உலகமே கொண்டாடிப் போற்றும்,
உயிற்ற ஞாயிற்று தினத்திலே_ பல 
உயிர்களை கொன்று குவித்து,-அதை 
உயிரற்ற நாளாக்கி விட்டாய் -நீயும் 
உதவாக்கரை மதவாதமே!! ,ஒழிக நீ …
உலக மக்களது பாதுகாப்புக்கு 
உத்தரவாதம் அற்றுப்போனதே-இன்று, 
உந்தன் கேவலமான செய்யலை- நீயும் 
உடனடடியாக நிறுத்தாயோ !! -சொல், 
உளமார எம்மக்கள் தமக்குப் பிடித்த 
உன்னத தெய்வங்களைத் தொழவும், 
உல்லாசம் காணவென்று_ ஒருசிலரும் ,
உற்றாரைப் பார்வையிட ,என-பலரும் 
ஊர்தேடிப் போய் நின்று -அங்கு 
உறவாடி மகிழ்ந்திருக்க -அன்று 
உங்கள் பகை தீர்த்து மகிழ்ந்திட 
உளங் கொண்டதேனோ? ,பாழும் 
உலகப் பயங்கரவாதமே !!!!!!!

உயிரற்ற நேசன்