எங்கள் முற்றத்து மல்லிகையே மேன்மையானது …

இசையும்,பாட்டும் மனதை இளகச் செய்கிறது…
தாலாட்டு பாடினால் தூக்கம் வருகிறது…
சோககீதம் பாடினால் அழுகை வருகிறது..
கடவுள் பக்திப்பாடலில் நெஞ்சம் நெகிழ்கிறது.
வீணை,வயலின்,சிதார்,போன்ற நரம்புக் கருவிகளில் பிறக்கும் இசை இதயத்தை இதமாக்குகிறது. இராகங்கள் பல நூறு இருந்தாலும்,மனசுக்கு பிடித்த இராகங்கள் என்று
சில உண்டல்லவா..பூபாளம் பாடிக்கொண்டே பொழுது விடிகிறது..
ஆனந்த பைரவி பாடிக்கொண்டே உலகம் இயங்குகிறது…
நீலாம்பரி பாடிக்கொண்டே தூங்கப்போகிறது..
அமிர்தவர்சினி பாடினால் மழை பொழிகிறது
புன்னாகவராளி பாடினால் பாம்பு கூட படம் எடுத்து ஆடுகிறது..
அறிவற்ற ஜந்துக்களையும்,அசையாப் பொருட்களையும் இசை தன்
வசப்படுத்திக்கொள்கிறது.
சுகமான சங்கீதம், இதமான பாடல் என் நெஞ்சுக்கு நிம்மதியை
தருகிறது….
சின்ன வயசில் இருந்தே என் மைத்துணர் இரா.தெய்வராஜனுடன் ஊரில் பாடித்திரிந்த நாட்கள்,அதன் பின்னர்,இலங்கை வானொலி,தொலைக்காட்சி,என்று தொடர்ந்த பயணம்,இன்று நானும் தெய்வராஜனும் சேர்ந்து பல இசை அல்பங்களை பாடிவிட்டோம்.இன்னும் பாடிக்கொண்டு இருக்கின்றோம் மாற்றான் தோட்டத்து மல்லிகையை விட எங்கள் முற்றத்து மல்லிகை எங்களுக்கு மேன்மையாக இருக்கிறது