எசன் அறநெறிப்பாடசாலையின் வாணிபூசைசிறப்பாக நடைபெற்றது

எசன் நுண்கலைக்கல்லூரி, எசன் அறநெறிப்பாடசாலையின் 32 வது, வாணிபூசை 24.9.அன்று சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.பூசைகளை எசன் நாகபூஷணி தியான பீடம் ஸ்ரீ சபாநாதக்குருக்கள் நடாத்திவைத்தார்.அவர் தனது ஆசிச்செய்தியில்,இங்கு பல பல்கலைக்கழக மாணவர்களைப் பார்க்கிறேன்.மகிழ்ச்சி.கல்வியும்,கலைகளுமே ,மனிதவாழ்வைச் செப்பனிடுகிறது.மனதைப் பண்படுத்துகிறது.அந்த வகையில், எசன் நுண்கலைக்கல்லூரிக்கு எனது பாராட்டுக்கள்.இக்கல்லூரியை, மாநில அரச கலாச்சாரப் பிரிவு அங்கீகரித்துள்ளதோடு, சான்றிதழ்களையும் அங்கீகரித்துள்ளது இவர்களது முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.என்றார்.

கலைமாலை எதிர்வரும் 30.9.2017 அன்று,பல சிறப்பு நிகழ்வுகளுடன் இடம்பெறவுள்ளது.தமிழக கலைஞர்களோடு மன்றக் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.தமிழகம், கிற்றார் கலைஞர் சைலு ரவீந்திரன், சங்கீதபூஷணம் திவ்யா குரு, இசைக்கலைமணி ஞானாம்பாள் ஆகியொரின் இசைக்கச்சேரிகளும் உண்டு.கட்டணமில்லை.அரிய கலைச்சங்கமம் தவறவிடாதீர்கள்.