***பவளக்கொடி இவள் பெயராம் ***

குவளையை கையிலெடுத்து, பக்குவமாய்
குலுங்காமல் அலுங்காமல் நடைபயிலும்,
கொடியிடையாளின் கொள்ளையழகு, இந்த
குவலயத்தையே கட்டிப் போட்டு விட்டதோ?
கன்னியவள் மேனியிலே வைத்த கண்கள்
கடினப்படுகிறதே ,வேறுதிசைபார்ப்பதற்கு.
கார்கூந்தலின் கலையழகு கண்டுதானோ
கார்மேகங்கள் கலைந்தோடி மறைகின்றன.
கண்ணேயுன் முன்னழகை காணப்பொறுக்காது
குன்றொன்று பின்னால் வெக்கித்து நிற்கிறதோ
காமதேனுவே உன்கண்களை மூடிகொள் நான்
கண்ணுறங்கவேண்டும்,காலமோ பனிக்காலமடி
காலையிலோ நான் பணிக்குப் போக வேண்டுமடி
கனவில் மீண்டும்வந்து என்கவலையைத் தீர்த்துவை
கண்ணுறங்கு கண்ணுறங்குகிறேன் கண்மணியே
மோக நேசன்