ஒற்றை பனை மரம்

ஒற்றை பனை மரம்
ஒருமையுடம் கேலி செய்கிறது
வெயிலுக்கு நிழல் தேடி அமர்ந்த மனிதனிடம்

தேசம் சிதையும் போது மனிதா
உன் இனம் மட்டும்
அழியவில்லை
என் இனத்தின் மீதும் எறிகணை விழ்ந்தது
துளிர் விட்ட தலைமுறையும் அழிந்தது
பண்பாடும் கருகிப்போனது
காவல் தெய்வங்களின் கனவும் கலைந்தது
தமிழன் வீரம் மெய்சிலிர்க்க வைத்தது
எம்மினத்தை எதிலியாக்கிட ஆடிவந்தவன் அலறி ஓடினான்
ஏதோ பல சதி செய்து மௌனமாக்கினான்

நீ மட்டும் எங்களை விட்டு ஓடினாய்
நாம் எம் தாய் மண்ணை விட்டு அகலவில்லை
அடி பணியவுமில்லை
உயிரைத்தொலைக்க அஞ்சி ஓடினாய்
அந்த உடலைப்புதைக்க இடம் தேடுகின்றாய்

என் அருகில் களமாடிய வீரன்
என் நிழலிலே வித்தாகினான்
அந்த புனிதன்
என்னிலிருந்து உதிர்ந்த விதையில்
மாவீரன் புதையுண்ட இடத்தில் விருட்சமாகி
அவன் நினைவைத் தாங்கி நிக்கின்றது
நான் பெருமிதம் அடைகிறேன்.

மட்டுநகர் கமல்தாஸ்