கிளிநொச்சி அக்கராயனில் இடம்பெற்ற ‚தமிழினி‘ சிறுகதைத் தொகுதி அறிமுக விழா.

கிளிநொச்சி அக்கராயனில் இடம்பெற்ற ‚தமிழினி‘ சிறுகதைத் தொகுதி அறிமுக விழா.

ஈழத்தின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையினைச் சேர்த்த பன்முகப் படைப்பாளியும், ஆசிரியருமான சமரபாகு சீனா உதயகுமார் எழுதிய ‚தமிழினி‘ சிறுகதைத் தொகுதியின் அறிமுக விழாவானது 23.10.2018 செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 12.05 மணிக்கு ஈழத்தின் கிளிநொச்சி மாவட்டத்திலமைந்த அக்கராயன் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது. நிகழ்விற்கு அக்கராயன் மகா வித்தியாலய அதிபர் கஸ்பார் மதுரநாயகம் தலைமை வகித்தார்.

சுடர்கள் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழ்மொழி வாழ்த்தினை அக்கராயன் மகா வித்தியாலய மாணவிகள் இசைத்தனர். வரவேற்புரையினை அக்கராயன் மகா வித்தியாலய ஆசிரியர் தி.நீதிராஜா வழங்கினார். தலைமையுரையினைத் தொடர்ந்து வெளியீட்டுரையினை அக்கராயன் மகா வித்தியாலய ஆசிரியை சிவாநந்தன் நந்தினி நிகழ்த்தினார். நூலினை கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சாந்தி விக்ரர் அறிமுகம் செய்ய, முதற்பிரதியினை அம்பலப்பெருமாள் அ.த.க பாடசாலை ஆசிரியர் செ.நிசாந்தன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூற்பிரதிகள் வழங்கப்பட்டன.

நூலின் ஆய்வுரையினை அக்கராயன் மகா வித்தியாலய ஆசிரியர் கிருஷ்ணானந்தன் ஆற்றினார். காவல்துறை அதிகாரி க.வினோத் கருத்துரை வழங்கினார். ஏற்புரையினை நூலாசிரியர் சமரபாகு சீனா உதயகுமார் வழங்கினார்.

இந்நூலானது நூலாசிரியரினால் தனக்கு கற்பித்த மலர் ஆசிரியருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.