குடிச்சுத்தான் பாருங்க !

நல்லாத்தான் 
இருக்குமுங்க 
கெமிக்கல் ஏதும் 
கலக்கல்லங்க 
உச்சி வெய்யிலில்ல 
உடம்புக்கு நல்லதுங்க
பட்டையில குடிக்கும்போது
புத்துணர்வு பிறக்குமுங்க
கண்டதையும் குடித்து
கால் தடுமாற வேண்டாமுங்க
மருந்தாகும் மகத்துவம்
இதில்தான் உள்ளதுங்க
அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சுங்க
அளவோட நாமிருந்தால்
ஆயுளும் நிலைக்குமுங்க
சீவல் தொழில் பிழைக்குமுங்க
அவங்க சீவியமும் நல்லபடி நடக்குமுங்க
குடிக்காம போகதைங்க
அதிக விலை இல்லையிங்க
எங்க கிராமத்தில கிடைக்குமுங்க
அமுத பணம் இதுதாங்க
ஒருமுறை குடிச்சுத்தான் பாருங்க
ஓசியில் குடிக்காம
காசக்கொடுத்து குடிங்கமக்கா
கஸ்டப்பட்ட இறக்கிறது
இஸ்டப்பட்டு தறேனுங்க
இன்பமாய் குடியுங்க .

Mannar Benil