சித்திரையில் பவனி வரும் என்ஜயன் பண்ணங்கண்டியானுக்கு சமர்ப்பணம்,

வினைகளை தீர்க்கும் விக்கினனுக்கு
எனது எழுதுகோல் ஈன்ற வரிகள்!

(பல்லவி)

லிங்கம் தந்த கணநாதன்
எங்கும் இசைக்கும் அவன் கீதம்
இன்னல் துடைக்கும் அவன் வேதம்
இன்பம் பெருகும் தொழும் நேரம்

அனுபல்லவி

அருள்வாய் ஐயா அருள்வாய் 
பேரொளியாய் வந்து அருள்வாய் ஐயா
எழுவாய் ஐயா எழுவாய் எல்லோர்
மனங்களில் நின்று அருள்வாய் ஐயா

(சரணம்1)

இருகரம் கூப்பியே நாம் வரவே..! 
இடர்களை தீர்த்திடும் நின் அருளே…!
ஆற்றங்கரை அமர்ந்து அருள்வாயே…! ஆனந்த நர்த்தனம் தருவாயே..! பன்னங்கண்டி பதி உறைந்த கணநாதா…!
பதிகம் பாடிடும் தினம் தினம் நாவதுவே…!

(சரணம் 2)

பனைமரக்காற்றின் ஓசையிலே…! 
பண்ணிசை பாடிடும் இளம் நாற்றே…!
திணை வயல் கொழிக்கும்ஊரினிலே..!
திடமுடன் அருளும் வித்தகனே…! 
சுகந்தங்கள் வாழ்வில் தினம் வரவே…!
ரதத்தினை இழுப்போம் மகிழ்வுடனே…!

தே.பிரியன்