சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை

யாழ் நல்லை கலாமந்திர் நாட்டியப்பள்ளி நடத்திய சதங்கை நாதம் 2019 – நடன ஆற்றுகை நிகழ்வு 23 6 2019 ஞாயிற்றுக்கிழமை நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது

கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இசைத் துறை தலைவர் கலாநிதி தட்சணாமூர்த்தி பிரதீபனும் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் நாட்டியக்கலைமணி யசோதரா விவேகானந்தன் , வேம்படி மகளிர் கல்லூரி முன்னாள் நடன பாட ஆசிரியர் வசந்தி குஞ்சிதபாதம் ஆகியோரும் கௌரவ விருந்தினராக யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அதிபர் லுடேவிக்கா மகேஸ்வரனும் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்கு நல்லை கலாமந்திர் இயக்குனர் அனுசாந்தி சுகிர்தராஜின் குரு கலாபூஷணம் பத்மினி செல்வேந்திரகுமார் மற்றும் பெரிய தாயார் கலாபூஷணம் இராஜேஸ்வரி தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் அணிசேர் இசைக்கலைஞர்களாக நட்டுவாங்கம் – அனுசாந்தி சுகிர்தராஜ் , பாட்டு தவநாதன் ரொபேட் மற்றும் வதனா திருநாவுக்கரசு மிருதங்கம் – சின்னையா துரைராசா வயலின் – அம்பலவாணர் ஜெயராமன் தபேலா – வெ.இரட்ணபிரபாகர சர்மா ஆகியோர் பங்கு கொண்டனர்.
.

நடன ஆற்றுகைகளில் 135 மாணவர்கள் பங்கு கொண்டனர். துர்க்கா மணிமண்டபத்தை நிறைத்து இரசிகர்கள் கலந்து சிறப்பித்தனர்.