ஓவியம் 1000′ ஜேர்மனி பணி மேம்படுத்துநராக தமிழருவி நயினை விஜயன் ,

தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவரவுள்ள ‚ஓவியம் 1000‘ பெருநூலிற்கான ஜேர்மனி தேச பணி மேம்படுத்துநராக தமிழருவி நயினை விஜயன் அவர்கள் செயலாற்றுகிறார்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள ‚ஓவியம் 1000‘ ஓவியப் பெருநூல்.

உலகெலாம் வாழும் ஈழத்தமிழர்களின் ஓவியம் வரையும் ஆற்றலை ஒருமித்த தளத்தில் சேர்க்கவும், அவர்களின் ஆயிரம் ஓவியங்களை ஒரே நூலில் இடம்பெறச்செய்து உலகெலாம் பரம்பலடையச் செய்யும் நோக்குடனும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இணைந்ததாக ‚ஓவியம் 1000‘ எனும் ஓவியப் பெருநூல் வெளிவர ஏற்பாடாகியுள்ளது. ஏற்கனவே 32 நடுகளின் 1098 கவிஞர்களை உள்ளடக்கிய ‚1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூலின் வெளியீட்டினைத் தொடர்ந்தே இப்பணியும் முன்னெடுக்கப்படுகின்றது. ஈழத்தினை மையமாகக் கொண்டு செயலாற்றும் இக்குழுமத்திற்கு உறுதுணையாக அனைத்து நாடுகளிலும் பணி மேம்படுத்துநர்களும், ஓவியச் சேகரிப்பாளர்களும் இயங்குவர். ஓவியப் பெருநூலின் வெளியீட்டு விழாவானது பணி முன்னெடுப்புக் குழுமத்தினரால் தீர்மானிக்கப்படும் இடத்தில் ஒழுங்கு செய்யப்படும்.

‚ஓவியம் 1000‘ ஓவியப் பெருநூலிற்கான ஓவியங்கள் கீழ்வரும் முறைமைகளுக்கு ஒப்ப சேகரிக்கப்படும்.

1. உலகில் எப்பகுதியிலும் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசும் உறவுகள் இப்பெருநூலிற்கான ஓவியங்களை அனுப்ப முடியும். மரணித்தவர்களால் வரைந்துவைக்கப்பட்ட‌ ஓவியங்களை உறவினர்களோ, உரித்துடையோரோ தகுந்த உறுதிப்படுத்தலுடன் அனுப்பலாம்.

2. வயது தொடர்பான கட்டுப்பாடுகள் இல்லை. ஓவியத்தின் தரம் நோக்கப்படும். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஓவியங்களையும் அனுப்பலாம்.

3. ஓவியத்திற்கு எவ்வகையான வர்ணங்களையும் பயன்படுத்த முடியும். எவ்வகையான ஓவியங்களையும் அனுப்பலாம். ஏற்கனவே வரையப்பட்ட ஓவியங்களும் ஏற்கப்படும்.

4) எவ்வகையான கருப்பொருளையும் மையப்படுத்தி ஓவியங்கள் அனுப்பலாம். சர்ச்சையை தோற்றுவிக்கக்கூடியதும், சமூகத்திற்கு ஒவ்வாததுமான ஓவியங்கள் ஏற்கப்படமாட்டாது.

5) ஓவியத்திற்கான தலைப்பினை இடுதல் விரும்பத்தக்கது. தலைப்பு இன்றியும் ஓவியங்கள் அனுப்ப முடியும். தலைப்பானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடப்பட வேண்டும். யாதேனும் ஒரு மொழியில் தலைப்பு இடப்படின் மற்றைய‌ மொழிக்கு இப்பெருநூற் குழுமத்தினர் மொழிமாற்றம் செய்துகொள்வர்.

6) ஏ4 தாளின் அளவில் ஓவியங்கள் வரையப்பட‌ வேண்டும். இதனைவிட‌ சற்று பெரிய அளவான தாளினையும் பயன்படுத்தி ஓவியங்கள் அனுப்பலாம். ஓவியப் பெருநூலில் அனைத்து ஓவியங்களும் ஒரே அளவிலேயே அமையப்பெறும்.

7) மின்னஞ்சல் மூலமாகவோ, அஞ்சல் முகவரியூடாகவோ, நேரடியாகவோ, பணி மேம்படுத்துநர்கள் ஊடாகவோ ஓவியங்களை கிடைக்கச் செய்யலாம். அஞ்சல் இடுவதாயின் பதிவு அஞ்சல் விரும்பத்தக்கது.

8) ஓவியங்களை துல்லியமான ஒளித்தெளிவுடனான புகைப்பட வடிவிலும் அனுப்பலாம்.

9) கணினி வரைவு ஓவியங்கள் ஏற்கப்படமாட்டாது.

10) பாடசாலை மாணவர்கள் தாம் அனுப்பும் ஓவியத்தினை அதிபர் அல்லது பொறுப்புள்ள ஆசிரியர் ஒருவர் மூலமாகவோ, சமூகத்தில் அங்கீகரிக்கப்படக்கூடிய இறப்பர் முத்திரையுடைய ஒருவரின் மூலமாகவோ தனியான தாளில் உறுதிப்படுத்தி அனுப்பி வைத்தல் வேண்டும்.

11) ஏனையவர்கள் தமது ஓவியம் என்பதனை சமூகத்தில் பொறுப்புள்ள ஒருவரது ஒப்பத்துடன் உறுதி செய்தல் வேண்டும்.

12) நூற்பணியினை முன்னெடுக்கும் குழுமத்திற்கு இவ்வித உறுதிப்படுத்தல்கள் இன்றியும் ஓவியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். தவிரவும் பணி மேம்படுத்துநர்கள், பணி நிறைவேற்றுநர் ஆகியோர் நேரடியாகவும் ஓவியங்களை பெற்றுக்கொள்வர்.

13) ஓவியங்களினை அனுப்புபவர் நூலில் பிரசுரிக்கத்தக்கதாக கடவுச்சீட்டு அளவு புகைப்படம் மற்றும் முகவரியினை தனியாக இணைக்க வேண்டும். ஒருவருக்கு சுய விருப்பு இல்லையேல் புகைப்படம் இணைக்கத் தேவையில்லை. குழுமத்தினரின் தொடர்பு கருதி தொலைபேசி எண் இடலாம். தொலைபேசி எண் பிரசுரிக்கப்படமாட்டாது. விரும்புபவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படலாம். பெயர், முகவரி என்பன தமிழிலும், ஆங்கிலத்திலும் அனுப்புதல் விரும்பத்தக்கது. யாதேனும் ஒரு மொழியில் அனுப்பப்படும் விபரத்தினை இப்பெருநூற் குழுமத்தினர் மொழிமாற்றம் செய்துகொள்வர்.

14) ஓவியசார் தகைமையுடையோரின் தேர்வின் அடிப்படையில் பெருநூலிற்கு ஓவியங்கள் உள்வாங்கப்படும்.

15) ஓவியங்களை அனுப்புவதற்கான அஞ்சல் முகவரி: பணி நிறைவேற்றுநர், ஓவியம் 1000, மத்திய நூல் நிலையம், விசுவமடு, முல்லைத்தீவு, இலங்கை. மின்னஞ்சல் முகவரி: tamiloviyam1000@gmail.com

16) தொடர்புக்கான தொலைபேசி எண்கள்: 0094 775892351, 0094 778067962, 0094 779042390 சர்வதேசம் : 0061 431200870, 0033 783725682, 0041 764211399, 0091 9443284823

17) யாதேனும் ஓவியத்தினை விற்பனைக்காக யாரேனும் கோரினால் அதன்மூலம் கிடைக்கும் நிதி உரிய ஓவியருக்கே வழங்கப்படும். ஓவிய நூலின் ஆளுகை என்பது நூற்குழுமத்திற்கு உரித்தானதாகும்.

18) ஓவியங்கள் பெற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி: 28.02.2018.