தாகம் இசைத்தட்டு அறிமுகவிழா 08.09.2019 யேர்மனி டோட்மூண்ட் நகநகரில் சிறப்பாக நடைபெற்றது.

தாகம் இசைத்தட்டு அறிமுகவிழா 08.09.2019 (ஞாயிற்றுக்கிழமை) யேர்மனி டோட்மூண்ட் தமிழர் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. பி.ப 3.30 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன், அகவணக்கம், முல்லை சசி அவர்களின் தாயகப்பாடலுடன் ஆரம்பமானது.

தொடந்து இசைப்பேழையில் அமைந்த பாடலுக்கு நாட்டிய தாரகை செல்வி. அனாமிக ரட்ணசிங்கம் அவர்களின் நடனம்,

செல்வி.சினேறுகா ரகு அவர்களின் தாயகப்பாடலுடன் கி.த.கவிமாமணி அவர்களின் இறுவெட்டு அறிமுகவுரையுடன் விழாவின் இறுவெட்டு அறிமுகம் செய்யப்பெற்றது. இறுவெட்டு அறிமுகத்தினை Gtv யேர்மனி இணைப்பாளர் திரு.சிவலிங்கம் அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு பிரதிகளை கலைவிளக்கு ஆசிரியர் திரு.பாக்கியநாதன் ,TKS ஸ்தாபன உரிமையாளர் ,அம்மாஸ் ஸ்தாபன உரிமையாளர் ,கோபுரா ஸ்தாபன உரிமையாளர் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.தொடர்ந்து முன்னைநாள் போராளி திரு.இராஜன் அவர்களின் மதிப்பீட்டுரை, பாடகர் துஸ்யந்தன் அவர்களின் பாடல் என்பன சிறப்பாக அமையப்பெற்றது.

நிகழ்வின் வாழ்த்துரைகளை சிவஸ்ரீ.தெய்வேந்திரகுருக்கள், திரு.பாக்கியநாதன், தமிழ்ரைம்ஸ் திரு.தவா, திரு.சபேசன், இசையமைப்பாளர் திரு.ஸ்ரீபாஸ்கர், ஆகியோர் வழங்கினர். ஏற்புரையினையும் நன்றியுரையும் திரு.இரா.செங்கதிர் அவர்கள் வழங்கினார். நிகழ்வின் தொகுப்பினை அறிவிப்பாளர் திரு. இராஜசூரி அவர்கள் அழகாக நிகழ்த்தினார்.

கி.த.கவிமாமணி …..யேர்மனி…