திரு.கோபாலரத்தினம் ழுதிய ஈழமண்ணில் ஒர் இந்தியச் சிறை “ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து IPK in Eelam „என்ற பெயரில் வெளியிட்டிருந்தனர்.

கடந்த 19.10.19 அன்று யேர்மனி டோட்முண்ட் நகரில் பழம்பெரும் ஊடகவியலாளரும் எழுத்தாளரும் ஈழநாடு ஈழமுரசு பத்திரிகைகளின் ஆசிரியராக பணியாற்றியவருமான திரு.கோபாலரத்தினம் அவர்கள் எழுதிய ஈழமண்ணில் ஒர் இந்தியச் சிறை “ என்ற பெயரில் அவர் தமிழில் எழுதிய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவரின் குடும்பத்தினர் IPK in Eelam „என்ற பெயரில் வெளியிட்டிருந்தனர்.

அவருடன் பணியாற்றி அவரை வழிகாட்டியாக வரித்துக் கொண்ட கனடாவிலிருக்கும் ஊடகவியல் மானிடவியல் குற்றவியல் ஆகிய துறைகளின் பேராசிரியராக பணியாற்றிவரும் சேரன் South Asian office யைச் சேர்ந்த Walter Keller ஆகியோர் நூலாசிரியருடன் பழகிய நாட;களில் அவரிடமிருந்து அறிந்து கொண்ட ஆளுமைகளை சிறப்பிட்டு உரையாற்றினர்.இளந்தலைமுறையைச் சேர்ந்த அனா யேர்மன் கல்லூரியொன்றில் கற்பிக்கும் Diasஆகியோர் நூலில் காணப்பட்ட விடயங்களை உள்வாங்கி சிறப்பாக உரையாற்றினர்.

இவ்விழாவினை காக்கைச் சிறகினிலே நூலாசிரியர் அறிவிப்பாளராக நெறிப்படுத்தியிருந்தார்..

.