தோழமைகரங்கள் 2019 கலைமாலை நிகழ்வு.2வது தடவையாக சிறப்பாக நடைபெற்று

2வது தடவையாக சுமார் 500 மேற்பட்ட தமிழ் உணர்வுள்ள பார்வையாளர்களுடன் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது தோழமைகரங்கள் 2019 கலைமாலை நிகழ்வு.

இவ் நிகழ்வின் ஆரம்பவிளக்கை திரு ஜெயம் மற்றும் திரு செங்கோல் அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ச்சியாக மங்கள விளக்கினை சுவிஸ் நாட்டில் வாழும் மிக முக்கியமானவர்களான

1. அருட்சுனைஞர் சிவருசி தர்மலிங்கம் சசிகரன் (பேர்ண் சிவன் ஆலயம்)
2. விடுதலைப் புலிகள் பத்திரிகை ஆசிரியர் :திரு. சுப்பையா .இரவீந்திரன்
3. ஆயுள் வேத வைத்தியர் :திருமதி சசி மீரா சிவராசலிங்கம்
4. இளம் தமிழ் சட்டத்தரணி :திரு ரஜீவன் லிங்கநாதன்
5. ஈழத் தமிழரவை தலைவி :திருமதி அன்னா அனோர்
6. இளம் உதவி மருந்தாளர் துசி அழகதுரை ( CFC பட்டம் பெழ்றுள்ளார்)
7. இளம் தமிழ் சட்டத்தரணி :திருமதி ஞானகௌரி சோமாஸ்கந்தன்
8. வங்கி மற்றும் பொருளாதார சட்டத்துறை பட்டம் பெற்றவரும் . முதலீட்டு வங்கியின் நிர்வாக இயக்குனர்: திரு குணபதி ஜங்கரன்
9. இளம் வைத்தியர் :செல்வி சிவனேசராசா ஆருணியா
10. இளம் சட்டதரணி : செல்வி மாதுரி அருளானந்தம்

ஆகியோர் ஏற்றி வைக்க

தமிழ் மக்களுக்காக தங்கள் இன்னுயிரை தந்த மாவீர்களுக்கான பொது சுடரினை முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி திருமதி கண்ணன் விமல்னி ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர் .

மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாக இருந்த நிகழ்ச்சி தவிர்க்கமுடியாத காரணங்களால் மாலை 17.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டாலும் இரவு 23.30மணிக்கு அனைத்து நிகழ்வுகளும் நிறைவிற்கு வந்நது குறிப்பிட தக்கதாகும்.